Breaking News

கல்முனையில் கைத்துப்பாக்கி மற்றும் கூரிய வாளுடன் நபர்கள் கைது

கல்முனை பிரதேசத்திற்குட்பட்ட விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யும் வீடு ஒன்றை நேற்று (03) சோதனையிடுவதற்காக சென்ற போது கைத்துப்பாக்கி மற்றும்   கூரிய வாளுடன் இரண்டு சந்தேக நபர்கள் விசேட அதிரடிப்படையினரினால் கைது  செய்யப்பட்டு கல்முனை தலைமை பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



கல்முனை 1  பிரதேசத்தைச் சேர்ந்த  62 மற்றும் 38 வயதுமதிக்கத்தக்க இருவரே அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸ் பெருங்குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அந்தவகையில் பல மாதங்கள் முன்பிருந்து குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த குறித்த வீட்டினை சோதனை செய்த  போதெ வீட்டியிருந்த அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி  பயன்படுத்தும் இரவைகள் மற்றும் கூறிய வாள்கள் கண்டெடுக்கப்பட்டதன் பின்னரெ குறித்த இருவரும்  கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்தெரிவித்தார்.

இன்று சந்தேக நபர்கள் இருவரையும் கல்முனை நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலதிக விசாரணை கல்முனை பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது.

No comments