கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் பிரதேச அரச திணைக்களங்களில் சரஸ்வதி பூசை நடத்த அனுமதிக்கப்படவில்லை
கிழக்கு மாகாணத்தில் பரவலாக உள்ள முஸ்லீம் பிரதேச அரச திணைக்களங்களில் சரஸ்வதி பூசை நடத்த அனுமதிக்கப்படவில்லை.
(சம்மாந்துறை, ஏறாவூர் பிரதேச செயலகத்திலிருந்து உருவாகும் பட்டறிவு)
இலங்கையில் பொதுவாக அரச திணைக்களங்களில் பல்மத சமய,கலாச்சார யிகழ்வுகள் இடம்பெறுவதும் அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் சக உத்தியோகத்தர்களுக்காக ஏனைய மத நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் வழக்கமான விடயம்.
இதுவே இன்றுவரையுள்ள நடைமுறை
ஆனால் இந்த நடைமுறைகளுக்கு மாறாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இந்த வருடம் சரஸ்வதிப்பூசை நிகழ்வுகளை நடத்த முயற்சித்த வேளையில் அங்கு அலுவலக தலைமைப் பொறுப்பிலுள்ள அரச அதிகாரியான பிரதேச செயலாளர் அனுமதி மறுத்தமை வெறும் மதக் காழப்புணர்வுடன் கூடிய திட்டமிட்ட மதவாதச் செயற்பாடு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அண்மையில் இதே பிரதேச செயலகத்தில் இஸ்லாமிய நிகழ்வுகளான இப்தார் நிகழ்வும்,பக்ரீத் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றன என்பது குறிப்பிடத் தக்கது.
அரச அதிகாரியாக உள்ள ஒருவர் தனது மதக் கோட்பாடுகளை அலுவலகத்தில் திணிக்க முயற்சிப்பதானது அவர் அரச அதிகாரியாக இருப்பதற்கான தகுதியைக் கேள்விக்குட்படுத்துகிறது என சமூக வலைத்தளங்களில் பரவலான கார சாரமான கருத்துக்கள் முன்வைத்து வருகின்றனர்.
இலங்கையில் எல்லா அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் போன்றவற்றில் பொதுவாக நவராத்திரி விழாவில் சரஸ்வதிபூசை, விஜயதசமி ஆயுதபூசை நடைபெறுவது வழமை அதைக்கூட நடத்துவதற்கு சம்மாந்துறை பிரதேச செயலக செயலாளர் D.S ஹனிபா தடை போட்டுள்ளார்.
அவர் தம்மை இலங்கை சோசலிச குடியரசு பிரதேச சபை செயலாளர் என்று நினைக்கவில்லை மாறாக சம்மாந்துறை ஹிஜ்ரா பள்ளியில் தொழும் மௌலவியாகத்தான் உணர்ந்து தடை போட்டுள்ளார்.
இதுபற்றி மேலதிக தகவல்!
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் சரஸ்வதி பூசை செய்வதற்கு மறுக்கப்பட்டுள்ளது. சுமார் 50 தமிழ் அரச உத்தியோகத்தர் கடமையாற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் சரஸ்வதி பூசை செய்வதற்கு பிரதேச செயலாளரிடம் அனுமதி கேட்டவேளை அவர் நிருவாக உத்தியோகத்தரிடம் கேட்குமாறு ௯றினார் ,நிருவாக உத்தியோகத்தரிடம் அனுமதி கேட்டபோது அவர் பிரதேச செயலாளரிடம் அனுமதி கேடீகுமாறும் என இருவரும் இவ்வாறு இரண்டு,வாரமாக இழுத்தடித்து வந்ததுடன் நேற்றைய தினம் பிரதேச செயலாளரீடம் மீண்டும் இது பற்றி கேட்டபோது பிரதேச செயலகத்தில் அனுமதிக்க முடியாது பிரதேச சியலகத்தீல் இருந்து 2 கிலோ ம்ற்றர் தூரத்தில் அமைந்துள்ள கலாச்சார நிலையத்தில் நடாத்துமாறு ௯றி இருந்தார். ஆனால் இஸ்லாமிய மத நிகழ்வுகள் அனைத்தும் இவ்வருடம் பிரதேச செயலகத்திலே நடை பெற்றது. இஸ்லாமிய நிகழ்வுகள் நடை பெற அனுமதி இருக்கும் போதுதமிழர் நிகழ்வுகள் ஏன் அனுமதிக்கபடவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இன நல்லிணக்கம் வெறும் பேச்சளவில் மட்டும் தானா?
No comments