வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஏறாவூரில் ஒருவர் கைது
சுமார்
நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான
வெளிநாட்டு சிகரட்டுக்களை
வியாபாரரத்திற்கென மோட்டார்
சைக்கிகளில் எடுத்துச்சென்ற
நபர் ஒருவர் நேற்றிரவு
செவ்வாய்க்கிழமை ஏறாவூர்
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடியிலிருந்து
ஏறாவூர்ப் பிரதேசத்தினூடாக
இந்த சிகரட்டுக்கள் எடுத்துச்
செல்லப்பட்டவேளை வாகனங்களைச்
சோதனையிட்ட பொலிஸார் 36
பொதி
சிகரட்டுக்களை கைப்பற்றியதாக
ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி
சின்தக்க பீரிஸ் தெரிவித்தார்.
பொலிஸாருக்குக்
கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து
பொலிஸார் வாகன சோதனை நடவடிக்கையில்
ஈடுபட்டிருந்தனர்.
சந்தேகநபர்
நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளார்.
இந்த
நபர் நீண்டநாட்களாக சட்டவிரோத
சிகரட் வியாபாரத்தில்
ஈடுபட்டுவருதாக பொலிஸாருக்குத்
தகவல் கிடைத்துள்ளது.
வர்த்தக
நிலையங்களுக்கு சட்டவிரோதமாக
சிகரட்டுக்கள் வினியோகம்
செய்துவருவதாக தெரியவந்துள்ளது..
No comments