Breaking News

காணி அபகரிப்புக்கு நீதிமன்றம் ஊடாக தீர்வு ; ஏழை மக்களின் வழக்குச் செலவுகளுக்கு சுமணரத்ன தேரர் உதவுவதாக உறுதி


மட்டக்களப்பு, வாழைச்சேனை, முறாவோடை பாடசாலை மைதானம் மற்றும் அப்பகுதி மக்கள் 57 பேருடைய குடியிருப்பு காணிகளை அத்துமீறி அபகரித்தவர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக தீர்வு பெற்றுத்தருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை முறாவோடை பாடசாலைக்கு சொந்தமான மைதானக் காணிக்கு மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாரதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் சகிதம் பொதுமக்கள் வேலியை அகற்ற முற்பட்ட சர்ச்சையையடுத்து சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலத்தில் விசேட கூட்டம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
இவ் கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், அனுரா திஸநாயக்கா . மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் கீர்தி ரத்தின,. கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் ரி.ரவி. , மங்களராம விகாரையின் விகாரதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் உட்பட பாடசாலை அதிபர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது கடந்தகால யுத்ததினால் இப் பாடசாலை மற்றும் ஆவணங்கள் அழிக்கப்பட்டது இதன் பிறகு இப் பாடசாலைக்கான ஆவணங்களை பிரதேச செயலகத்திடம் கோரியிருந்தோம். அப்போது இது பாடசாவைக்கு உரிய காணி என பிரதேச செயலகம் அறித்திருந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் மைதானத்திற்குள் அத்துமீறி நிலத்தை ஆக்கிரமித்தனர். இது தொடர்பாக அன்றைய தினம் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தோம். பொலிசார் உரியநடவடிக்கை எடுக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அனுரா திஸநாயக்கா அரசகாணி எனவும் இதனை முறாவோடை சக்தி வித்தியாலய பாடசாலை மைதானத்திற்கு கடந்த 07-11-2016 ஆம் ஆண்டு கையளித்துள்ளதாகவும் பாடசாலைக்கு சொந்தமான காணியை அத்துமீறி அபகித்தவர்களுக்கு எதிராக நாங்கள் தலையிடமுடியாது. இதனை கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்ததுடன் கிழக்கு மாகாண கல்வி செயலாளருடன் தொடர்பு கொண்டு வியாழக்கிழமை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதாகவும் அதனூடாக தீர்வு பெற்றுக் கொள்வதாகவும் தீர்வு வரும் வரைக்கும் பொலிஸ் காவல் கடமையில் ஈடுபடுவதாகவும் காணியை அபகரித்தவர்கள் புதிதாக கட்டிடமோ அல்லது எந்தவிதமாக புனர்நிர்மாண வேலைகள் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அப்பகுதில் 57 தமிழ் மக்களுக்கு உரிய காணிகள் அபகரிப்பு தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போது கோரளைப்பற்று, மீராவோடை தமிழ் கிராத்தில் வேம்பு என்று அழைக்கப்படும் நிலஅளவையாளரின் வரைபடத்தின் கீழ் தலா ஒவ்வொருவருக்கம் அரை ஏக்கர் காணி வீதம் 57 தமிழ் மக்களுக்கு ஜெய பூமி உறுதிகள்; 464 காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா கையொழுத்திட்டு 2002 ஆம் ஆண்டு வழங்கப்பட்து.
இக்காணி அந்த உறுதி வழங்கியவர்களுக்கு சொந்தம் இதனை யாரும் அத்துமீறி அபகரிக்க முடியாது என காணி ஆணையாளர் தெரிவித்து, இதற்கு இக் காணிகளை அபகரித்தவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் உடனடியாக வழக்குத் தொடர்ந்து தீர்வு பெற்றக் கொள்ளுமாறு தெரிவித்ததையடுத்து இந்த இரு காணி பிரச்சினைகளுக்கும் நீதிமன்றத்தின் ஊடாக வழக்கு தொடர்ந்து தீர்வு காணுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அந்த ஏழை மக்கள் வழக்கு தொடர்வதற்கான ஏனைய உதவிகளை சுமணரத்ன தேரர் செய்வதாக உறுதியளித்ததையடுத்து கலந்துரையாடல் நிறைவுக்கு வந்தது.

No comments