3 தினங்களுக்கு சுவாமி விபுலாநந்தர் மாநாடும் கலைவிழாவும் மட்டக்களப்பில் நாளை ஆரம்பம்
சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவையொட்டிய சுவாமி விபுலாந்தர் மாநாடும் கலை விழாவும் நாளை வியாழக்கிழமை தொடக்கம் அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைபு;பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் ஆகியன இணைந்து இந்த 3 நாள் மாநாட்டையும் கலைவிழாவையும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகளில் அரசியல்வாதிகள், அறிவியலாளர்கள், அருளாளர்கள் என்ற பட்டியலில் அதிதிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கல்லடியிலுள்ள சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் வியாழக்கிழமை காலை ஆரம்பிக்கும் முதல் நாள் நிகழ்வில் சிறைச்சாலைகள் மறுசீரமைபு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், கல்வி இராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஷ்ணன், இந்து மத விவகார முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை, கிழக்குப் பல்கலைக்கழ வேந்தர் வேல்முருகு விவேகானந்தராஜா உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளனர்.
கல்லடியிலுள்ள சுவாமி விபுலாந்தர் சமாதியிலிருந்து அழகியற் கற்கைகள் நிறுவகம் வரை ஊர்வலத்துடன் ஆரம்பமாகும் முதல்நாள் நிகழ்வில் நூல்களின் கண்காட்சி, யாழ் நூல் வெளியீடு, சுவாமி விபுலாந்தர் நினைவு விருது, விஷேட பாராட்டுதல்கள் உட்பட இன்னும் பல கலையம்சம் வாய்ந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன..

No comments