Breaking News

சகோதர இனங்களோடு ஒற்றுமையாக வாழ வேண்டும்: சிறிநேசன்

நாட்டிலே சகோதர இனங்களோடு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே தமிழினத்தின் உள்ள அனைவரதும் சிந்தனையாக இருந்தது  என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை – வீரமுனையில் 232 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட தினத்தின் 27வருட ஆண்டை நினைவு கூர்ந்து நேற்று மாலை 6.30 மணியளவில் வீரமுனை சிந்தா யாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த நாட்டிலே சகோதர இனங்களோடு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே தமிழினத்தின் உள்ள அனைவரதும் சிந்தனையாக இருந்தது ஆனால் ஓரினத்தவர்கள் மாத்திரம் அளவுக்கு அதிகமான உரிமைகளையும், சுதந்திரத்தினையும் அனுபவித்துக் கொண்டு ஏனைய சிறுபான்மை இனத்தவர்களை இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கும் போக்கு காணப்படுகின்றது ஏன தெரிவித்துள்ளார்.

232 மக்கள் அன்று இந்த ஆலயத்திலே அநீதியான, அராஜகமான முறையில் படுகொலை செய்யப்படடிருந்தார்கள். இங்கிருக்கின்ற பொறுப்புள்ள அரசாங்கம் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கான தண்டனைகளை வழங்கியிருக்க வேண்டும்.


ஆனால் குற்றம் இழைத்த குற்றவாளிகளுக்கு பதவி உயர்வுகளை பெற்றுக்கொடுத்ததோடு அவர்களை கௌரவித்து மரியாதைக்குரியவர்களாக மதிக்கும் கேவலமான செயற்பாட்டினையே அரசு செய்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்

ஆனால் குற்றம் இழைத்த குற்றவாளிகளுக்கு பதவி உயர்வுகளை பெற்றுக்கொடுத்ததோடு அவர்களை கௌரவித்து மரியாதைக்குரியவர்களாக மதிக்கும் கேவலமான செயற்பாட்டினையே அரசு செய்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்


No comments