வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான 50,000 நிரந்தர செங்கல் சீமெந்து வீடுகள் - பிரதமர்
மீள்குடியேற்றத்திற்கும் நல்லிணக்கத்திற்கான முன்னெடுப்பின் ஒரு பகுதியாக வடக்கு மற்றும் கிழக்கில் 50,000 நிரந்தர செங்கல் சிமெண்ட் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ள வேலை திட்ட்ங்களை அரசு பூர்த்தி செய்துள்ளது.
பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான 50,000 நிரந்தர செங்கல் சிமெண்ட் வீடுகள் கட்டிக்கொடுக்க அமைச்சரவைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சானது பிற தொடர்புடைய வலையமைப்புகள் மற்றும் முகவர் நிறுவனங்களுடன் இணைந்து இத்திட்த்தினை செயற்படுத்தவுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக் கூட்டத்தின் வழிகாட்டலின் கீழ் இந்த திட்டம் அமைக்கப்பட்டதோடு, பிரதம மந்திரி தலைமையிலான பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவைக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு அமைச்சரவை ஒப்புதல் பெற்றுள்ளது.
ஏற்கனவே முன்மொழிவுகளுக்கான அழைப்புகள் விளம்பரப்படுத்தப்பட்டு தகுதியுள்ள ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நிதியாளர்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சமுதாய அமைப்புக்கள் இந்த முயற்சிகளை வரவேற்றுள்ளனர். இதன்முலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீண்டகால தேவைகளைப் பூர்த்தி செய்யப்படும் என்பது உறுதியாகிறது.
No comments