வந்தாறுமூலையில் அதிகரித்துள்ள தற்கொலை செய்யும் வீதம் - இன்னோர் மரணம்
வந்தாறுமூலையும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் தற்கொலை செய்யும் வீதம் அதிகரித்துள்ளது அதிலும் தூக்கு போட்டு தற்கொலை செய்வது விசேட தேர்வாக உள்ளது.
தற்போதைய குடும்பத்தினரிடை புரிந்துணர்வு அற்ற மனப்பான்மை ,மதுபாவனை,நுண்கடன், காதல் தோல்வி, சந்தேகம் ,பெற்றோர் தமது பிள்ளைகளை கண்டிப்பது போன்ற காரணிகள்தான், தற்கொலைகளை தீர்மானிப்பதில் இக்கிராமங்களில் தூண்டுகின்றது.யுத்த காலத்தில் இப்படியான தற்கொலை வீதம் மிகக்குறைவு.இவ்வாறன நிலையில் மீண்டுமொரு தற்கொலை இடம் பெற்றுள்ளது.
#வந்தாறுமூலை "#வேல்ட் #விஷன்" #இரவுக் #காவலாளி (16/09) #தூக்கிட்டு #தற்கொலை.
வந்தாறுமூலை, பிரதான வீதியை சேர்ந்த மயில்வாகனம் சிறிதர் (55) என்பவர், போதையிலிருக்கும் போது, மனைவியுடன் சிறிது முரண்பட்டுக்கொண்டு, வேலைக்கு செல்வதற்காக ஆடைகள் மாற்றுவதற்கு சாமியறைக்குள் சென்று கதவை தாப்பாளிட்டவர், நேரமாகியும் வெளியே வராததால், மனைவி மகள் ஆகியோர் கதவை தட்டி சத்தமிட்டு அழைத்தபோது, பதில் ஏதும் கிடைக்காததால் உறவினர்கள் உதவியுடன் சாமியறை யன்னலை உடைத்து பார்த்த போது வளையில் போடப்பட்ட பலகையில் நைலொன் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கி மரணித்த்துள்ளனர்.
No comments