சர்வாதிகார நிர்வாகம் நடத்தும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் குறித்து ஊடகங்களில் செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் மற்றும் முகநூலில் செய்திகளை பகிரும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அவருடைய நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் என பலரையும் பொலீசரை கொண்டும் குறித்த அரசதிணைக்கள அதிகாரிகளை கொண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
ஏற்கனவே மூன்று ஊடகவியலாளர்கள் அரசாங்க அதிபரின் முறைப்பாட்டிற்கு அமைய மட்டக்களப்பு பொலீசாரினால் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அரசாங்க அதிபரின் நிர்வாக முறைகேடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறி வாகரை இளைஞர் ஒருவர் பொலீசாரினால் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அதே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக கூறி காத்தான்குடியில் பணியாற்றும் பிரகாஷ் என்ற ஆசிரியர் மீது மேலதிகாரிகளால் அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. அத்துடன் அரசாங்க அதிபரிடம் மன்னிப்பு கேட்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. (கடிதம் இணைப்பு)
இதேநேரம் அரசாங்க அதிபரால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணங்களை ஊடகங்களுக்கு வழங்கியதாக கருதி செங்கலடி மற்றும் வாகரை பிரதேச செயலாளர்களை பொய்குற்றச்சாட்டுகளை சுமத்தி மகிந்தவின் பாணியில் கொழும்பிற்கு இடமாற்றம் செய்து பழிவாங்கியுள்ளனர். இதைவிட தனது கட்டளைகளுக்கு அடிபணிய மறுத்த 10 மேற்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அரச உயர் அதிகாரிகளை வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளார். ஆனால் தனது ஊழல் செயற்பாடுகளுக்கு துணையாக நிற்கும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட கணக்காளர் உள்ளிட்ட சிலர் 20 வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றியும் இன்னும் இடமாற்றம் வழங்காமல் காப்பாற்றி வருகின்றார்.
இதுவரை இவரால் இடமாற்றம் பெற்ற நிருவாக சேவை உத்தியோகத்தர்கள்.
01.எஸ்.பாஸ்கரன் - மேலதிக அரசாங்க அதிபர் - மட்டக்களப்பு
தற்போதைய அரசாங்க அதிபரை விட சேவை மூப்பில் உள்ள அதிகாரி ஊழல் மோசடிகளுக்கு துணைபோகாதவர்
02. அ.வாசுகி – பிரதேச செயலாளர் - பட்டிப்பளை
தற்போதைய அரசாங்க அதிபரை விட சேவை மூப்பில் உள்ள அதிகாரி அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட புறம்பான விடயங்களை செய்ய மறுத்தமை.
03. எஸ்.கிரிதரன் - மேலதிக அரசாங்க அதிபர் - மட்டக்களப்பு
நிருவாக சேவை விசேட தரத்தில் உள்ளீர்க்கப்பட்டு அரசாங்க அதிபரின் முறையற்ற காணி வழங்கல் செயற்பாடுகளுக்கு ஒத்துளைக்காமை மற்றும் மாவட்டச் செயலக கேள்வி சபையில் இடம்பெறும் மோசடிகளுக்கு துணைபோகாமை
04. எஸ்.கோபாலரெத்தினம் - பிரதேச செயலாளர் - களுவாஞ்சிகுடி
நிருவாக சேவை விசேட தரத்தில் உள்ளீர்க்கப்பட்டு 2014 டிசம்பர் மாத வெள்ளநிவாரண மோசடிக்கு ஒத்துளைப்பு வழங்காமை மற்றும் முறையற்ற காணி வினியோகத்திற்கு ஒத்துளைக்காமை.
05. வ.தவராசா – பிரதேச செயலாளர் - மண்முனை வடக்கு
முறையற்ற காணி வினியோகத்திற்கு ஒத்துளைக்காமை. வாழ்வாதார திட்டங்களுக்கு மாவட்டச் செயலகத்தினால் வழங்கப்பட்ட பொருட்களை பெற்றுக்கொள்ள மறுத்தமை கணக்காய்வு உத்தியோகத்தர்களுக்கு உண்மையான தகவல்களை வழங்கியமை.
06. ரீ.தயாபரன் - பிரதேச செயலாளர் - ஏறாவூர் பற்று
தற்போதைய அரசாங்க அதிபரை விட சேவை மூப்பில் உள்ள அதிகாரி என்பதால் மட்டக்களப்பு மாவட்டச் செயலக பிரிவிற்குள் உள்ளீர்க்க மறுத்தமை.
07. ஏ.எம். அன்சார் - பிரதேச செயலாளர் - ஓட்டமாவடி மேற்கு
வாழ்வாதார திட்டங்களுக்கு மாவட்டச் செயலகத்தினால் வழங்கப்பட்ட பொருட்களை பெற்றுக்கொள்ள மறுத்தமை கணக்காய்வு உத்தியோகத்தர்களுக்கு உண்மையான தகவல்களை வழங்கியமை.
08. ஏ.தாஹீர் - உதவி பிரதேச செயலாளர். – ஏறாவூர்.
பதவி ஏற்றதும் தன்னை வந்து சந்திக்க வில்லை என்ற ஒரு காரணத்திற்காக
09. வி.சிவப்பிரியா பிரதேச செயலாளர் - பட்டிப்பளை.
2014 வெள்ள நிவாரணத்தில் இடம்பெற்ற மோசடிகளை மூடி மறைக்க மாவட்ட பிரதம கணக்காளருக்கு ஒத்துளைக்காமை முறையற்ற அத்து மீறிய குடியேற்றங்களுக்கு தடையாக செயற்பட்டமை.
10. எஸ் .உதயஸ்ரீதர் பிரதேச செயலாளர் - ஏறாவூர் பற்று, செங்கலடி.
முறையற்ற அத்து மீறிய குடியேற்றங்களுக்கு தடையாக செயற்பட்டமை. அரசாங்க காணி அத்து மீறிய கைப்பற்றல்களை தடுத்தமை அரசாங்க அதிபரின் நிர்வாக நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்த ஒத்துளைக்காமை. மண் அகழ்வு நடவடிக்கையினை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டமை.
11. ஆர். ராகுலநாயகி பிரதேச செயலாளர் - கோறளைப்பற்று வடக்கு, வாகரை
முறையற்ற அத்து மீறிய குடியேற்றங்களுக்கு தடையாக செயற்பட்டமை. அரசாங்க காணி அத்து மீறிய கைப்பற்றல்களை தடுத்தமை அரசாங்க அதிபரின் நிர்வாக நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்த ஒத்துளைக்காமை. மோசடியாக அரசகாணி விற்பனையினை தடுத்தமை.
No comments