சிறுமிக்கு சூடு வைத்த தாய் கைது (ஏறாவூரில் சம்பவம் - படங்கள்)
பெற்ற #மனம் #கல்லாக, #பிள்ளை #மனம் #பித்தாக(ஏறாவூரில் சிறுமிக்கு சூடு)
நேற்று (15/09) மாலை மத்ரசாவுக்கு சென்று வீடுதிரும்பிய ஏழு வயதுடைய சிறுமி சாஜஹான் இர்ரீபா, தனது விரலில் போடப்பட்டிருந்த தங்க மோதிரத்தை தொலைத்துவிட்டு வீடுவந்திருப்பதை அறிந்த தாய், அச் சிறுமிக்கு கறண்டியை நெருப்பில் சூடாக்கி வயிற்றிலும், கால் பாதத்திலும், கைப்பட்டையிலும் சூடு வைத்ததால் சிறுமியின் மரண ஓலமான அழுகுரலை கேட்ட அப்பகுதி மக்கள் ஓன்று கூடி நடந்த விடயத்தை அறிந்து உடனடியாக ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவித்தன் பேரில், தாய் கைது செய்யப் பட்டதோடு குழந்தை , மேலதிக சிகிச்சைக்காக ஏறாவூர் வைத்தியசாலையிலிருந்து, இரவு 10.30 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தாய்தான் எனக்கு சூடு வைத்தார் எனக் கூறிய அக் குழந்தை,
எனது தாயை ஜெயிலுக்கு அனுப்பவேண்டாம் என பொலிஸாரிடம் மன்றாடியது மனதை உருக்கியது.
No comments