ஒரு நாள் காய்ச்சலினால் (சாதரண வைரல் காய்ச்சல் என கருதியதால்) உயிரிழந்த 09 வயது சிறுமி.(சந்திவெளியில் சம்பவம்)
பாலையடித்தோனா, சந்திவெளியில் சம்பவம்.
அற்புதன் கிருபைராணியின் தம்பதியின் இரண்டாவது மகளான கிதுசா என்ற சிறுமிக்கு 16/09 அன்று காலை காய்ச்சல் ஏற்பட, சந்திவெளி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மருந்தெடுத்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.
மறுநாள் (17/09)காய்ச்சல் குறைந்திருந்த போதும் சிறுமிக்கு, அதிகரித்த களைப்பு காணப்பட்டுள்ளது.
மதியம் 01.30 மணியளவில் சோறு உட்கொள்ள கொடுத்தபோது சிறுமி வாந்தி எடுத்து மூக்கினாலும், வாயினாலும் சளி வெளியாகி சோர்வுற்றதால் உடனடியாக மீண்டும் சந்திவெளி வைத்தியசாலைக்கு கொண்டுவரும்போது வழியிலேயே சிறுமி மரணமடைந்திருக்கிறது.
சிறுமி, தாயின் வயிற்றிலிருக்கும்போதே தந்தையை இழந்தவர்.
மேலும் தாய் தற்போது சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணிபுரிகிறார்.
இதன் காரணமாக சிறுமி அம்மம்மா (லீலா) வின் பராமரிப்பிலேயே இருந்து வந்துள்ளார். சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படிருக்கிது.
இன்று (18/09) பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்தான் மரணத்திற்கான காரணம் வெளிவரும் என நம்பப்படுகின்றது.
எப்பொழுதும் எமது பொதுமக்களின் சாதரண குணம் உள்ளது ஏதாவது நோய் உருவாகினால் ஊர், சுற்றியுள்ள அயலூர் தனியார் வைத்தியசாலைகளில் மருந்தை பெற்று அதை ஒழுங்குமுறையாக குடிப்பதில்லை.
காலையில் ஒரு வைத்தியரிடம் மாலையில் இன்னும் ஒரு வைத்தியரிடம் மருந்தை வாங்குவதிலே குறிக்கோளாக இருப்பார்கள் நோயாளி ஆபத்தான கட்டத்தை அடையும் தருவாயில் வைத்தியசாலை சென்று மரணமடைந்தால் எமது பொதுதரப்பினரினரின் கவனயீனத்தை மறைத்து வைத்தியசாலை தரப்பு மீது இலகுவாக குற்றத்தை சுமத்தி தப்பித்து போகும் மனநிலை உருவாகியுள்ளது.
இதே நேரம் தன்னாமுனை தொடங்கி வாழைச்சேனை வரையான பகுதியில் வாழும் தமிழ் பல தமிழ் கிராம மக்களுக்கு முறையான சகல வசதி கொண்ட ஆதார வைத்தியசாலை இல்லாமையும் அதாவது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தாவது எமது பகுதி அரசியல்வாதிகளுக்கு கோரிக்கை விட்டு நெருக்கடி கொடுப்பதில்லை இது இன்னும் வரும் எமது சங்கதியை அழிப்பதற்கு ஒவ்வானது.
இப்பகுதியில் ஒரு ஆதார வைத்தியசாலை உருவாக இத்தொகுதி அரசியல்வாதிகளாக இருந்தவர்களான
#பிள்ளையான் முதலமைச்சரா இருக்கும் போதும் இப்பொழுது உள்ள அமைச்சர் துரைராஜசிங்கம்,
#செங்கலடி அமல்MP (முன்னாள் Tmvp)
#வந்தாறுமூலை மாகாணசபை உறுப்பினர் எட்வின் கிருஸ்ணராஜா,கிரான் #முன்னால் அமைச்சர் கருணா எல்லோரும் நினைத்திருந்தால் முன்னேற்றிருக்கலாம் என்பது அப்பகுதி மக்களின் விசனமாக இருக்கிறது
No comments