காணி வசதிகள் இல்லாத சகலருக்கும் காணி – பிரதமர் உறுதி
காணி வசதிகள் இல்லாத சகலருக்கும் காணி வழங்குவதற்கு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் நேற்றைய சபை அமர்வின் போபது எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளித்தார்.
இதற்காக 20 லட்சம் காணி உறுதிகள் வழங்கப்படும் என பிரதமர் கூறினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் , அரசியல் யாப்பின் மீதான 13ஆவது திருத்தத்தில் காணிகளை எவ்வாறு பகிர்வது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயத்திற்கும், வீடமைப்புக்கும் காணிகள் அவசியம். கொழும்பில் காணிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதால் அடுக்குமாடிகள் அமைக்கும் தேவை எழுந்துள்ளது. எனவே, சமகால காணி கொள்கை குறித்து தீர்மானம் எடுப்பது அவசியமாகிறது. காணி வங்கியை அமைத்து சகல செயற்பாடுகளையும் சீர்செய்ய முடியும் என;று குறிப்பிட்டார்.
No comments