மட்டக்களப்பில் சுகாதாரத்திணைக்களத்தின் நடவடிக்கை ஏறாவூர் தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் அரசியல் வாதிகள் கவனிப்பார்களா?
பல வருடங்களாக செங்கலடிப்பிரதேச சுகாதார வைத்தியபிரிவின் கீழ்இயங்கும் தமிழ்பிரதேசங்களை ஏறாவூர் நகரப்பிரிவுடன் இணைப்பதற்கான உத்தரவு மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப்பணிமனையினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இச்செயலானது ஏறாவூர் பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே இனக்குரோதத்தை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்களினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏந்த நோக்கத்தின் அடிப்படையில் இப்பரதேசங்கள் இணைக்கப்பட்டாலும் இவ்இணைப்பினால் எதிர் காலத்தில் குறிப்பிட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டி நேரிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யுத்தத்துக்கு முன்னைய காலப்பகுதில் இப்பிரதேசங்கள் ஏறாவூர் நகர்ப்பகுதியின் கீழேயே இருந்ததாகவும் , யுத்த சூழ்நிலைகாரணமாகவே தற்காலிகமாக செங்கலடிப்பிரிவுடன் இணைக்கப்பட்டதாகவும் தற்போது சுமுகமான சூழுல் தென்படுவதால் மீண்டும் இணைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
எது எவ்வாறு இருந்தாலும் இதனால் காலப்போக்கில் பலபின்விளைவுகள் ஏற்படும் என ஏறாëர் தமிழ் மக்கள் அஞ்சுவதனால் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் தலையிட்டு இவ்விடயத்தில் சாதகமான நிலமையை தோற்றுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடப்பட்டுள்ளது.
No comments