திருகோணமலை லிங்கநகர் அம்மன் கோயில் புனரமைக்க துறைமுக அதிகார சபை தடை!
திருகோணமலை லிங்கநகர் அம்மன் கோயில் புனரமைக்க துறைமுக அதிகார சபை தடை!
இப்பகுதியிலுள்ள லிங்கநகர் அம்மன் கோயில் மக்களுக்கு இன்னும் வீட்டு காணி உறுதி வழங்கவில்லை, இதை பற்றி எந்த பாராளுமன்ற உறுப்பினர்களோ முன் நின்று பேசிக்கிறாங்க இல்ல என்பது இப்பகுதி மக்களின் நாளாந்த கவலைகளில் ஒன்று.
25 வருடமாக அம்மன் கோயில் லிங்கநகரில் வசிக்கும் மக்களுக்கு தீர்வுகாண ஒரு முதற்கட்ட நடவடிக்கை
இதுவரை இல்லை அதற்குள் இடி விழுந்தது போன்று கோயிலையும் புனரமைக்க துறைமுக அதிகாரசபை தடை போட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இனி இதே மாதிரி திருகோணமலை பட்டினமும் சூழலில் பிரதேசங்களும் அடையாளமின்றி ஒவ்வொரு அரச திணைக்களத்திலும் அழிந்து போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இப்பகுதியோடு சேர்ந்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசச் செயலாளர் பிரிவு பற்றி சிறு குறிப்பு.
திருகோணமலை பட்டினமும் சூழலும் என்பது இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தின் நகரப்பகுதியையும் அதனைச் சூழவுள்ள அயற்பகுதிகளையும் உள்ளடக்கிய பிரதேச சபைப் பிரதேசத்தினைக் குறிக்கும்.
கிராம அலுவலர் பிரிவுகள்
வில்லூன்றி
மனையாவெளி
அருணகிரிநகர்
தில்லைநகர்
சோனகவாடி
அரசடி
பட்டணத்தெரு
பெருந்தெரு
மட்டிக்களி(மட்கோவ்)
அபேபுர
ஜின்னாநகர்
உவர்மலை
சிவபுரி
லிங்கநகர்
உப்புவெளி
திருக்கடலூர்
முருகாபுரி
ஆண்டான்குளம்
சிங்கபுர
மிகுந்துபுர
கன்னியா
பீலியடி
மாங்காயூற்று
அன்புவெளிபுரம்
புளியங்குளம்
செல்வநாயகபுரம்
வரோதயநகர்
பாலையூற்று
கோவிலடி
பூம்புகார்
வெள்ளைமணல்
நாச்சிக்குடா
சீனக்குடா
காவத்திக்குடா
முத்துநகர்
கப்பல்துறை
சுமேதரங்காபுர
சாம்பல்தீவு
சல்லி
இலுப்பைக்குளம்
வில்கம்
வெல்வெறி
திருகோணமலைப் பட்டினம் 42 கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்டதாகும். தமிழ், முஸ்லீம், சிங்களம் என மூவின மக்களைக் கொண்டுள்ளபோதிலும் தமிழர்களே இப்பிரதேசத்தில் செறிந்து வாழ்கின்றனர்.
No comments