Breaking News

மட்டக்களப்பில் பிரதேச செயலாளரின்றி இயங்கும் செயலகங்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 பிரதேச செயலகங்கள் சில மாதங்களாக பிரதேச செயலாளர்களின்றி இயங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகம் கடந்த 4 மாதங்களாக பிரதேச செயலாளரின்றி உதவிப் பிரதேச செயலாளரைக் கொண்டு இயங்கி வருகின்றது.
இதேவேளை, ஏறாவூர் நகர பிரதேச செயலகம் கடந்த சுமார் 3 மாதங்களாக பிரதேச செயலாளரின்றி இயங்கி வருகின்றது.

மேலும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகம், வாகரை பிரதேச செயலகம், ஆகியவையும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பிரதேச செயலாளர்களின்றி இயங்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் மேற்படி பிரதேச செயலகங்களுக்கு பிரதேச செயலாளரகள் நியமிக்கப்பட வேண்டும் என அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள பொது நல அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

No comments