பழுதடைந்து நிற்கும் சந்திவெளித்துறை பாதையும் இளைஞர்களின் எழுச்சியும் (அவலமான படங்கள்)
வெள்ளகாலத்தில் மிகவும் சிரமத்தின் மத்தியில் பாமர மக்க்ளால் பயன்படுத்தப்படுகின்ற ஒரு போக்குவரத்து பாதையே சந்திவெளி துறை பாதை. இப்பாதையில் வெள்ளகாலத்தில் வருமானம் நாள் ஒன்றுக்கு ஒரு இலட்சமாகவும் சாதாரண நாட்க்களில் நாள் ஒன்றுக்கு இருபதாயிரம் அல்லது இருபத்தைந்தாயிரம் வருமானம் கிடைக்கும். பல்லாயிர கணக்கானோர் இப்பாதையினுடாக பயன் பெறும் அதே நேரத்தில் இப்பாதை முன்னாள் முதலைமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பூரண முயற்ச்சியின் பலனால் சந்திவெளி, திகிலிவெட்டை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமென்றும் கூறலாம்.
தற்போது கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் சிகாப்தீன் தலமையிலும் சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலய நிருவாகசபை கண்காணிப்பில் நடைபெற்று வருகின்றது. இதனூடாக குடும்பிமலை, தொப்பிகலை போன்ற பிரதேசங்களில் விவசாயம் மற்றும் சேனை பயிர் செய்து வாழ்வாதாரத்தை நாடாத்துகின்ற வறிய மக்களே அதிகம் இதில் பயணிக்கிண்றனர்.
இவ் பாதையால் பிரதேச சபை செயலாளர் சிகாப்தினோ அரசியல்வாதிகளோ பயணிப்பதில்லை. அண்றாடம் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் விறகுவெட்டுபவர்கள் போன்ற ஏழை மக்கள்தான் பயணம் செய்பவர்கள்.
இன்றோடு 6 நாட்க்களாக பாதை பழுதடைத்த நிலையில் தரித்த இடத்திலே இன்றுவரை நிற்கிறது. அன்றாடம் தனது ஜீவனோபாயத்தை நடத்துகின்ற மக்களும் திகிலிவெட்டையிலிருந்து சந்திவெளி பாடசாலைக்கு போகும் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர்.
இப்போது சந்திவெளி இளைஞர்களின் கேள்விகள்
இவ் பாதையில் வசூலிக்கும் பணத்தில் சிகாப்த்தினுக்கு பங்கு கொடுக்கும் சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலய நிருவாக சபைக்கு தெரியாதா?
அல்லது அவர்கள் நித்ததிரையா?
சந்திவெளில இதை தட்டிக்கேட்க பொது அமைப்புகள் இல்லையா?
இருந்தும் உங்கள் சேவை மந்தகதியா?
நல்லாட்சி போட்ட எலும்புக்கு வால் ஆட்டி அமிர்அலியை ஊருக்குள்ள மோட்டார்சைக்கிள் பேரணிபோட்டு புனிதமான சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலய மேடையில ஏத்தி பாலம் போட்டுத்தாரன் எண்டு ஊளையிட்ட குள்ள நரிகளுக்கு கண் தெரியலையா?
வெள்ள காலத்தில் மட்டும் ஏழை மக்களின் பணத்தை வசூலிக்க போட்டி போட்டு அரசாங்க வேலையை லீவுபோட்டு வரிசையில் நிண்டு பிச்சை வாங்க மட்டும்தானா முடியும், தட்டிகேட்க தைரியமில்லையா?
ஆறு நாட்க்களாக பாதை தரித்த இடத்திலே கிடக்கின்றது, யாருமே கண்டுகொள்ளவில்லை
வெள்ளகாலத்தில் திகிலிவெட்டையூடாக குடும்பிமலை பிரதேசத்திற்கான இவ் பிரதான போக்குவரத்து பாதையை எந்தவொரு பணவசூலிப்புமில்லாமல் பிரதேசபை நடாத்துவதற்க்கு உரிய அதிகாரிகள் அவன செய்து தருவீர்களா?
இவ்வண்ணம்
-திகிலிவெட்டை சந்திவெளி இளைஞர்கள்
No comments