Breaking News

ரொகிங்கியாவின் வரலாறும் தற்போது நடப்பதும்


#பிரம்மாவின்_தேசத்தில்_ரொகிங்கியாக்களின்_வரலாறு!!
#ரொகிங்கியர்கள்_எல்லோரும்_முஸ்லீம்கள்,,
#பர்மிய_முஸ்லீம்கள்_எல்லோரும்_ரொகிங்கியர்கள்_அல்ல!!


ROHINGYA : ரொகிங்கியா எனப்படும் இஸ்லாமிய வங்காள மொழி பேசும் மக்கள் எட்டு லட்சம் பேர்வரையில் பர்மாவின் மேற்கு மாநிலமான அரக்கான் மாநிலத்தில் வாழ்ந்துவருகின்றனர்.
1950-களுக்கு முன்னர் ரொகிங்கியாக்கள் மிகவும் சிறிய இனமாகவே இருந்தனர்.இவர்கள் வங்கதேசத்தில் இருந்து 
கூலித் தொழிலாளர்களாக வேலைக்கு வந்தவர்கள்

பர்மாவின் முக்கிய பகுதிகளில் இந்திய முஸ்லிம்கள், மலாய் முஸ்லிம்கள், சீன முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனர் )இவர்கள் ஆங்கிலேயேர் காலத்தில் இங்கு குடியேறியவர்கள்) 
பெரும்பாலான முஸ்லீம்களும் தமிழர்களும் பர்மிய விடுதலைக்குப் பின்னர் வெளியேற்றப் பட்டு விட்டார்கள். குறிப்பிட்டவர்கள் மட்டுமே பர்மியக் குடியுரிமை வழங்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.
ரொகிங்கியாக்கள சொல்வது போல முகாலய மன்னர் காலத்தில் குடியேறிய வியாபாரிகளின் வழி வந்தவர்கள் அல்ல என்கிறார்கள் பர்மியர்கள், வங்கதேசத்தின் சிட்டஹொங் எல்லைப் பிரதேச வழியாகக் கூலி வேலைக்குச் சென்றவர்களே ரொகிங்கியாக்கள். 1950-களுக்குப் பின் பல ஆயிரம் வங்காள முஸ்லிம்கள் அனுமதியின்றி பர்மாவில் குடியேறத் தொடங்கினார்கள். 
வங்கதேச விடுதலைப் போர் காலங்களில் மேலும் ஆயிரம் 
ஆயிரம் வங்காளிகள் பர்மாவுககுள் நுழைந்து அங்கேயே 
குடியேறி விட்டனர்.

பர்மாவில் 1921-ம் ஆண்டு எடுக்கப் பட்ட மக்கள் தொகைக் கணிப்பின் போது பர்மாவில் வாழ்ந்த இனங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அவற்றில் கூட ரொகிங்கியா என்ற சொல் இடம்பெறவே இல்லை.அன்றைய ஆங்கிலேய அரசின் பர்மிய Cazette லும் இவர்கள் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.
1950களில் வங்கதேச எல்லைப் புறக் காடுகளில் முஜாஹித்கள் எனப்படும் தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வந்தது. இவர்களின் நோக்கம் அராக்கான் மாநிலத்தின் வட பகுதிகளைக் கைப்பற்றிக் கிழக்குப் பாகிஸ்தானுடன்(இன்றைய பங்களாதேஷ்) இணைக்க வேண்டும் என்பதே. இந்த இயக்கத்தில் இருந்த உறுப்பினர்கள் அனைவருமே வங்காளத்தில் இருந்து சட்ட விரோதமாக அராக்கான் மாநிலத்தில் இடம் பெயர்ந்து வந்தவர்களே. காஸிமின் குழுவில் இருந்தவர்கள் பலர் பாகிஸ்தானில் சென்று பயிற்சியும் பெற்று வந்தார்கள்.இந்த நிலையில் பர்மிய இராணுவம் முஜாஹிது இயக்கத்தை தோற்கடித்தது. பல முஜாஹித்கள் அரசுப் படையால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தங்களை ரொகிங்கியாக்கள் என அறிவித்துக் கொண்டனர்.
1960-களில் யு நூ அதிபராகத் தேர்தலில் வெற்றிப் பெற்றதும் பர்மிய இனங்களுக்குத் தனிமாநிலங்களை உருவாக்கத் திட்டமிட்டார். இதன் அடிப்படையில் பர்மாவின் ராக்கின் இன மக்கள் வாழும் அராக்கன் மாநிலம் உருவானது.
இந்த நிலையில் அராக்கனில் வாழ்ந்த வங்காளிகள் தமக்கும் தனி மாநிலம் தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். ஆனால் அவர்கள் யாவரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பதால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது ( பர்மாவில் 132 இனங்கள்
வாழ்வதாகவும் அவர்கள் பர்மிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது)

இந்த நிலையில் அராக்கனில் வாழ்ந்த வங்காளி முஸ்லிம்கள் போலி வரலாற்றுத் தகவல்களை வெளியிடத் தொடங்கினார்கள். அதன் படி அரபு வணிகர்கள் வந்த கப்பல் அராக்கனில் மூழ்கிவிட அங்கிருந்து தப்பி வந்து அவர்கள் அராக்கானில் குடியேறி பர்மிய பெண்களை மணந்ததாகவும், அவர்களே ரொகிங்கியாக்கள் எனக் கதைக் கட்டி விட ஆரம்பித்தார்கள். பல வரலாற்று ஆய்வாளர்கள் முஸ்லிம்களின் இந்தக் கூற்றை மறுத்தும் வந்தனர்.
இரண்டாம் உலக யுத்த காலங்களில் ஜப்பானை படைகள் பொழிந்த குண்டு மழைகளுக்கு அஞ்சிய பர்மிய ராக்கீன் இன மக்கள் வங்கதேசத்துக்கு அருகே உள்ள கிராமங்களில் இருந்து வெளியேறி அராக்கான் மாநிலத்தில் உள்ள நகரப் பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். பின்னர் ஆள் அரவமற்ற பகுதிகளாக இக்கிராமங்கள் மாறிப் போனது. இதனால் இப்பகுதிகள் ருவாகாங்க் என்றழைக்கப்பட்டன. ருவாகாங்க் என்றால் பழைய கிராமங்கள் அல்லது ஆள் இல்லாத கிராமங்கள் என்று அர்த்தப்படும். இந்த நிலையில் வங்காளத்தில் இருந்து குடியேறிய கூலித் தொழிலாளர்களும், சட்ட விரோத குடியேறிகளும் இந்தக் கிராமங்களில் குடியேறி வாழத் தொடங்கினார்கள். இந்த நிலையில் அராக்கான் பகுதிகளில் உள்ள நகரங்களுக்குக் கூலி வேலை செய்யப் போகும் வங்காளிகள் தாம் எங்கிருந்து வருகின்றனர் எனக் கேட்கும் கேள்விகளுக்குத் தாம் ருவாகாங்க காஜா எனச் சொல்வார்களாம். அதாவது ருவாகாங்கில் இருந்து வருகின்றோம் என, அவர்களுக்குத் தெரியாது ருவாகாங்க் என்றாலே பழைய கிராமங்கள் என்று அர்த்தம் என்பது. இதுவே காலப் போக்கில் ரொகிங்கியாக்கள் என்ற சொல்லாக மருவியது.
1960-களில் தமக்கான வரலாறுகளாகப் பொய்களைப் புனைய தொடங்கிய பல இஸ்லாமியர்கள் தாம் 9-ம் நூற்றாண்டில் இருந்தே வாழ்ந்து வருவதாகக் கதைக் கட்ட ஆரம்பித்ததாக மற்றைய பர்மிய மக்கள் கூறுகின்றனர்
//////////////////////////////////::::::////////////////////////////////////:::::::::::
ரொகிங்கியாக்களில் சிலர் தாம் முகாலயர்களின் வாரிசு என அறிவித்துக் கொண்டார்கள். ஆனாலும் அதுவும் உண்மை இல்லை என்பதைப் பர்மிய வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 16-ம் நூற்றாண்டில் ஷா சுஜா என்னும் இளவரசன் இருந்தான். ஔரங்கசீப்பின் இளைய தம்பியான இவன் அரசராக முயன்றான், ஆனால் அம்முயற்சி தோல்வி காணவே உயிருக்கு அஞ்சி அராக்கானில் ஆட்சி செய்த சண்ட துத்தம்மா என்னும் மன்னனிடம் அடைக்கலம் புகுந்தான். 1660-களில் அவனுக்கு அடைக்கலம் கொடுத்த மன்னன், பின்னர் அவனின் மகளை மனைவியாக்கிக் கொள்ள ஆசைப்பட்டுப் பெண் கேட்க போனான். ஆனால் இதனைச் சம்மதிக்க மறுத்துவிட்டான் ஷா சுஜா. இதனால் கோபமுற்ற மன்னன் சண்ட துத்தம்மா அனைத்து முகாலயர்களிலும் வெட்டிப் போடும் படி உத்தரவிட்டான். அதன் படி அனைவரும் கொல்லப்பட்டனர். இதனைக் கேள்வியுற்ற முகாலய மன்னர்கள் சண்ட துத்தம்மாவிடம் போர் தொடுத்து வந்தனர். இதனால் அராக்கான் மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்த சித்தாங்கோங்க் பகுதியை முகாலயரிடம் இழந்துவிட்டான். இன்றுவரை சிட்டஹொங் பங்களாதேஷின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. ஆனால் அங்கு வாழும் பெரும்பான்மையினர் பர்மிய மொழி பேசும் பௌத்தர்களாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது,
ஏழாம் நூற்றாண்டில் கப்பலில் வந்த அரபு வாணிகர்களின் கப்பல் உடைந்து, அவர்கள் தப்பி வந்து அராக்கானில் இருந்த ம்ராக் யூ மன்னராட்சிக் காலத்தில் குடியேறியவர்களே தாங்கள் என இந்த ரொகிங்கியாக்கள் எனக் கூறுகின்றனர். ஆனால் ஏழாம் நூற்றாண்டில் ம்ராக் யூ மன்னர்களே ஆட்சி செய்யவில்லை ! தன்யாவட்டி மன்னர்களே அப்போது ஆட்சியில் இருந்தனர். தன்யாவட்டி மன்னர் காலத்தில் பர்மாவில் முஸ்லிம்கள் இருந்தமைக்கான ஆதாரங்களோ, எந்தவிதக் குறிப்புகளுமோ இல்லை.
/////////////////////////////:::::::::::////////////////////////////////////////////
தற்போது நடக்கும் கலவரத்துக்கான பின்னணியில்

ஒரு பௌத்த பெண்ணை நான்கு ரொகிங்கியர்கள் பாலியல் வன்முறை செய்து கொலை செய்ததால் ஏற்பட்டதாக 
சில தகவல் ஊடகங்களும்,,,,,
ஒரு பௌத்த பெண்ணை ஒரு ரொகிங்கிய இளைஞன் 
பாலியல் வன்முறை செய்து கொலை செய்தது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டும் கலவரம் உருவானதாகவும் சில ஊடகங்களும் கூறியுள்ளன

இது போன்ற இனக்கலவரங்கள் பல முறை கடந்த இருபதாண்டுகளில் ஆண்டுகளில் நடந்துள்ளன. ஆனால் அப்போது எல்லாம் இவ்வளவு பெரிதாக ஊடகங்கள் கூறவில்லை. ஆனால் தற்போது ஜனநாயக ஆட்சியைத் தழுவ நினைக்கும் பர்மாவில் பிரச்சனைகளை வளர்க்கவும் , சீனச் சார்பு நிலையில் இருந்து அமெரிக்கச் சார்பு நிலைக்கு மாறி வரும் பர்மா மீது அழுத்தங்களைக் கொடுக்கவே இப்படியான கலவரங்கள் தூண்டப்பட்டு, அவற்றைப் பற்றிய பல அவதூறு செய்திகளைப் பரப்பி வருவதாக இன்றைய அரசின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்
சட்ட விரோதமாகக் குடியேறிய ரொகிங்கியாக்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டதை ஒட்டு மொத்த முஸ்லிம்களும் பர்மாவில் புறக்கணிக்கப்படுவதாகச் செய்திப் பரப்பி வருவதும், அண்மையில் ஏற்பட்ட இனக்கலவரங்களில் பர்மிய ராணுவம் 20,000 முஸ்லிம்களைக் கொன்று விட்டதாகவும் போலிச் செய்திகள் பலவற்றை வெளியிடுவதாகவும் பர்மிய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது


Sara Sivam அவர்களின் பதிவு.




No comments