Breaking News

மகாசங்கங்களின் ஆலோசனைப்படியே ஆட்சி நடத்த வேண்டும்

நாட்டின் ஆட்சியாளர்கள் மகாநாயக்க தேரர்கள் மற்றும் மகா சங்கங்களை ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று அமரபுர பீடத்தின் மகாநாயக்கரான கொட்டுகொட தம்மவாச தேரர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஏற்பாட்டில் நேற்று அலரி மாளிகையில் நடந்த ஆயிரக்கணக்கான பிக்குகளுக்கு தானம் அளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“மகாநாயக்கர்கள் உள்ளிட்ட மகாசங்கத்தின் ஆலோசனைப்படியே நாட்டை நிர்வகிக்க வேண்டும். பௌத்த மதத்தில் கூறப்பட்டுள்ள தம்ம போதனைகளின் அடிப்படையில் தான், பௌத்த மதகுருமார் தமது ஆலோசனைகளை வழங்குவர்.

மகாசங்கத்தின் ஆலோசனைப்படி தான் டி.எஸ்.சேனநாயக்க ஆட்சி நடத்தினார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments