Breaking News

மீண்டும் சந்தித்த மகிந்த – ராஜித

மகிந்த ராஜபக்சவைக் கடுமையாக விமர்சித்து வரும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, மகிந்த ராஜபக்சவுடன் கைகுலுக்கி சிரித்துப் பேசிய நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 68 ஆண்டு நிறைவு நிகழ்வு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.



இதன்போதே, மகிந்த ராஜபக்சவும், ராஜித சேனாரத்னவும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்தித்துக் கலந்துரையாடினர்.

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட போது, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து அவருடன் வெளியேறிய முதலாவது நபராக ராஜித சேனாரத்ன இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments