"சிறகுகள்" நிறுவனத்தின் உதவிக்கு முதல்கடட குடும்பங்கள் தெரிவு
தமிழர் எல்லைப்புற கிராமங்களில் வசிக்கும் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்பாடுத்த வேண்டியதன் அவசியத்தன்மையினைக் கருத்திற் கொண்டு "சிறகுகள்" தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால், தெரிவு செய்யப்பட் குடும்பங்களுக்கான சுயதொழில் முயற்சிகளுக்கான உதவி வழங்கும் நிகழ்வு முதற்கட்டமாக (17.09.2017) ஞாயிற்றுக்கிழமை தன்னாமுனை, சவுக்கடி கிராமத்தில் இடம்பெற்றது.
இதன்படி சவுக்கடியைச் சேர்ந்த ரவிக்குமார் சந்திரிக்கா தம்பதியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களும் சிறகுகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தவிசாளர் திரு. செந்தூரன் அவர்களது நிதியின் மூலமாக அதன் பொதுச்செயலாளர் திரு. ஜனாத்தன் அல்ப்ரெட் மற்றும் பொருளாளர் திரு. அருள்மொழிவர்மன் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சவுக்கடி கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் திரு. TL.சுஷாந்தன், உட்பட கிராமமக்களும் கலந்து கொண்டு தமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
No comments