Breaking News

மயிலாவட்டவானில் தீடீரென்று உருவாக்கிய அதிசய வீதிகள்


கிரான்புல் சேனை அணைக்கட்டுக்கான ஆரம்ப வேலைகளுக்காக  மயிலவட்டவான் பகுதிக்கு அடிக்கல் நாட்ட நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மற்றும் எதிர் கட்சித் தலைவர் இரா சம்மந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், சிறிநேசன் அவர்களுடன் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரின் வருவதை முன்னிட்டு மயிலவட்டவான் பாதையில் காணப்பட்ட குழிகளை நிரப்ப  அருகில் உள்ள வயல் நிலங்களில் இருந்து மண் எடுக்கப்பட்டு நிரப்பப்பட்டிருந்ததாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

01. இது வரை காலமும் இவ் வீதிகளில் காணப்பட்ட குழிகள் உங்களுடைய கண்களில் தெரியவில்லையா?
02. குழிகளை நிரப்ப ஏழை மக்களின் வயல் நில மண் தான் வேண்டுமா? கிறவல் கூட கிடைக்கவில்லையா?

இதையே அரசியல்வாதிகள் காலாகாலமாக கடைப்பிடிக்கின்றனர். மக்கள் உயிரோடு விளையாடும் வீதிகளின் அவல நிலை குறித்த ஆயிரம் கோரிக்கைகளும், வேண்டுகோள் மடல்களும் குவிந்தாலும், எல்லாவற்றிற்கும் பொருத்தமான வேலைத்திட்டம் வரும் போது பார்க்கலாம் என அலட்சிய பதில் அளிப்போர் தமது அரசியல் பிரச்சாரத்திற்காக கிராமங்களுக்குள் நுழையும் போது தமது இருப்பையும், மக்களையும் ஏமாற்றுவதற்காக திடீரென வீதியை சீர் செய்வது நாகரீகமாகிவிட்டது. 

அதுவும் நிரந்தரமாக அல்ல அவர்களது வாகனம் போய் வருவதற்கு (அன்றைய தேவைக்காக) மட்டுமாகவே அமைகின்றது. எத்தனை வருடங்களாக அம்மக்கள் இவ்வீதிகளூடாக பேருந்து பயணமின்றி நடை, சைக்கிள் மூலம் சீவியத்தை கழிக்கின்றனர். 
அது பெரிதில்லை ஆனால் ஒரு நாளைக்கு போய்வருவது கஷ்டமாக உள்ளது என்பதற்காக மாற்றியமைக்க நினைக்கிறீர்கள். இது தான் மக்கள் சேவையா...? 
இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவை தானா...? 
ஒரு கிராமத்திற்கு பிரமுகர் ஒருவரை அக்கிராம மக்கள் வரவேற்கின்றனர் என்றால், அதனூடாக தமது நிலைமையினை காட்சியாக காண்பித்து மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அன்றி வேறொன்றுக்கும் இல்லை. ஆனால் இந்த பச்சோந்திகள் ஒரு நாளைக்குள் ஊரையே அலங்கரித்து மக்களின் எதிர்ப்பார்க்களில் மண்ணை தூவி தம்மை சேவகர்களாக காண்பித்து விடுகின்றனர். 
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் மட்டு இளைஞர்கள்.




No comments