Breaking News

கிழக்கு பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத் தொகுதியை, பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஆக்கிரமித்திருப்பதைக் கண்டித்து கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத் தொகுதி மாணவர்கள் சிலரால் ஆக்கிரத்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் நீதிமன்றம் விடுத்துள்ள கட்டளையை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், போராட்டம் எனும் போர்வையில் எமது கலாசார விழுமியங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும், உடனடியாக அம்மாணவர்கள், நிர்வாக கட்டடத்தொகுதியிலிருந்து வெளியேற வேண்டுமெனவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.















No comments