Breaking News

வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட ஒரே நாளில் உடலில் ஏற்படும் நன்மைகள்!

வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட ஒரே நாளில் உடலில் ஏற்படும் நன்மைகள்!

சுவையிலும் சரி, ஆரோக்கியத்திலும் சரி, பூண்டு ஒரு பிரமாதமான உணவுப்பொருள். பலர் அதனை உணவில் சேர்த்துச் சமைக்கிறார்கள், சிலர் அப்படியே  பச்சையாகச் சாப்பிட்டுவிடுகிறார்கள்.

பூண்டைச் சாப்பிடுவதன்மூலம் ஒருவருடைய ரத்த அழுத்தப் பிரச்னைகள், கொலஸ்ட்ரால் கோளாறுகள் போன்றவை சரியாகும், இரத்த நாளங்கள் லகுவாகும், இதன்மூலம் இதயம் சார்ந்த பிரச்னைகளைத் தூரத் துரத்திவிடலாம்.

அதேபோல், பூண்டுகள் நம் உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேராமல் பார்த்துக்கொள்கின்றன, ஆன்ஜியோடென்சின் II ஹார்மோனைத் தடுக்கின்றன.

பூண்டை எப்படிச் சாப்பிடுவது?

ஆறு பூண்டுகளை வறுத்துச் சாப்பிடுங்கள். இதன்மூலம் நம் உடலில் என்னவெல்லாம் நன்மைகள் என்று பாருங்கள்:

* சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில், பூண்டு செரிமானமாகிவிடும்
* அடுத்த ஒரு மணி நேரத்தில் தொடங்கி, பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்து உடல்நலத்தைக் காக்கும், புற்றுநோய் செல்களை அழிக்கும்
* அடுத்த இரண்டு மணி நேரத்தில், உடலின் வளர்சிதைமாற்றம் தூண்டப்படும், தேவையில்லாத நீர், கொழுப்பு குறையும்
* ஆறு முதல் ஏழு மணி நேரம் தாண்டியவுடன், பூண்டு இரத்த நாளங்களில் நுழையும், பேக்டீரியாக்களை எதிர்த்து உடாலுக்கு ஆரோக்கியம் தரும்
* அடுத்த ஒரு மணி நேரத்தில், பூண்டின் சத்துகளை உடல் உறிஞ்சிக்கொள்ளும், இது சிறந்த பாதுகாப்பாகச் செயல்படும்
* அதன்பிறகுதான், பூண்டின் நிஜமான பெரிய பலன்கள் தெரியத்தொடங்கும், இதயம் சார்ந்த பல பிரச்னைகளைப் பூண்டு குணப்படுத்தி உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்புச்சக்தியைத் தரும், எலும்புகளை வலுவாக்கி, சோர்வைப் போக்கும்

சுருக்கமாகச் சொன்னால், நாள்முழுக்கச் சுறுசுறுப்போடும் ஆரோக்கியத்தோடும் வாழ்வதற்கு, தினமும் ஆறே ஆறு வறுத்த பூண்டுகள் போதும்.

No comments