கிழக்குப் பல்கலையில் சிங்கள மாணவர்களால் தாக்குதல்! நிருவாக கட்டிடமும் முற்றுகை! இரவில் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
நேற்று (08.08.2017) கிழக்குப் பல்கலைக்கழக சிங்கள மாணவர்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பல நாட்களாக நடந்துவரும் தங்களது போராட்டங்களை நிர்வாகம் கவனிக்கவில்லை என்றும் விடுதி வசதியை வழங்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையை நீக்கக் வேண்டும் என்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்ட முடிவு நேரத்தில் சிங்கள மாணவர்கள் அனைவரும் நிர்வாக கட்டிடத்தினுள் சென்று அதை முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட உத்தியோகஸ்தர்களில் ஒருவரின் கை சிங்கள மாணவர்களால் உடைக்கப்பட்டதுடன் ஏனைய இருவர் தாக்கப்பட்டனர்.
கை உடைந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் நிர்வாக கட்டிடம் தொடர்ந்தும் சிங்கள மாணவர்களின் கட்டுப்பாட்டில் இருந்துவருக்கிறது.
இதனை தொடர்ந்து மீண்டும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்போது பெண்பாதுகாப்பு தனியார் உத்தியோகத்தர் மாணவர்களால் தாக்கபட்டு மட் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்படட நிலையில் நேற்று
மாணவர்கள் மீண்டும் நள்ளிரவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் பிரச்சனையில் ஈடுபட்டனர். கடமையில் இ௫ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவ௫ம் தமக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் நேற்றிரவு கடமை நிலையத்தை விட்டு எறாவூர் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இன்றும் முறுகல் நிலையில் இரவில் பரவலான அபாயமான சூழ்நிலை நிலவுகிறதால் ஊழியர்கள் இரவு நேர கடமைகளை தவிர்த்து வருகிறார்கள்.
இதற்கு தீர்வு கிடைக்குமா?
No comments