Breaking News

ஜனாதிபதியின் கிழக்கின் அபிவிருத்திப் பணிகளுக்குப் பொறுப்பாக - ஹிஸ்புல்லா

ஜனாதிபதியின் கிழக்கின் அபிவிருத்திப் பணிகளுக்குப் பொறுப்பாக ஹிஸ்புல்லா


கிழக்கின் அபிவிருத்திப் பணிகளுக்குப் பொறுப்பான தலைமைத்துவத்தை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கே ஜனாதிபதி வழங்கவுள்ளதாக வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளருமான பேசல ஜயரத்ன தெரிவித்தார்.

காத்தான்குடியில் நேற்று (சனிக்கிழமை) இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பாரியளவில் அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முன்னெடுக்கவுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் மைத்திரிபால சிரிசேனவுக்கு வாக்களித்தமையினாலேயே அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

அதேபோன்று, முஸ்லிம் மக்களின் ஆதரவினாலேயே அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் மாத்திரமே சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கம், ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.
நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்கி தெற்கில் சிங்கள அடிப்படை வாதமும், வடக்கில் தமிழ் அடிப்படை வாதமும் அதிகரித்துள்ள நிலையில், அதனை நிவர்த்தி செய்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடியவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரமே.

2020 இன் பின்னரும் 2025 வரை ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேனவே தொடர்ந்தும் இருப்பார். அதுவரை காலம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இந்த பிரதேசத்தின் அபிவிருத்திகளுக்கு பொறுப்பானவராக இருப்பார்” என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments