வன்முறைக்கு தூபமிடட முறாவோடை காணியின் பிரச்னை இன்று முடித்துவைக்கப்பட்ட்து
வாழைச்சேனை முறாவோடை சக்திவித்தியாலயத்துக்குச் சொந்தமான காணி சம்மந்தமாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று
16-08-2017 மு ப 12 மணிக்கு இடம்பெற்ற விசேட கூட்டத்தில் அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், மட்டக்களப்பு பொலிஸ்மா அதிபர், வாழைச்சேனை பிரதேச செயளாளர், கற்குடா வலய கல்விப்பணிப்பாளர், அப்பாடசாலை அதிபர், சமண தேரோ மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சிலர் கலந்துகொண்டனர்.
இக்காணி பாடசாலைக்குச் சொந்தமான காணி உடனடியாக நாளை வழங்கு தொடரவும் என அக்கூட்டத்தில் அரசாங்க அதிபர் அவர்கள் திட்டவட்டமாக கூறினார். அத்தொடு அப்பகுதி தமிழ் மக்களின் காணியில் அத்துமீறி குடியேறும் நபர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என பொலிஸ்மாதிபரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று பொலிஸ்மாதிபர் வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கட்டளையிட்டார்.
நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் எப்படி வெற்றியளிக்கப்பட்டது என்றும் எப்போதும் ஒண்றுபட்டால் வெண்றுகாட்டலாம் என்பதற்கு இது ஓர் உதாரணம் என மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
No comments