Breaking News

யாழில் மாணவியை நசுக்கி கொன்ற கவச வாகனம்


புங்குடுதீவு மகா வித்தியாலயத்தினை அண்டிய சந்தியில் சிங்கள கடற்படையினரின் கவசவாகனம் ( பவள் ) அதிவேகமாக வந்துமோதியதில் பாடசாலை சிறுமியொருவர் இறந்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது .




மோட்டார் சைக்கிளில் தனது மாமனாருடன் றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்தபோதே கவசவாகன சாரதியின் அசட்டையீனத்தால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது .



கடற்படையினருக்கான உணவுப்பண்டங்களை ஏற்றியிறக்கவே இந்த பவள் பயன்படுத்தப்பட்டு வந்தது . அதிவேகமாக மேற்படி வாகனத்தை செலுத்தவேண்டாமென்று கோத்தம்பர முகாம் கட்டளை அதிகாரிக்கு நாம் பலதடவைகள் முறைப்பாடுகளை தெரிவித்திருந்தோம் .

குறிப்பாக இரவுவேளைகளில் ஒரு முன்பக்க விளக்குடன் பலநாட்களாக ஒடித்திரிந்தமை குறித்தும் மக்கள் விசனம் தெரிவித்திருந்தனர் .


புங்குடுதீவில் தற்சமயம் 4200 மக்களே வாழ்ந்துவருகின்ற நிலையில் 267 கடற்படையினரோடு ஆறு நேவி முகாம்கள் காணப்படுகின்றன . இவற்றினை குறைந்தபட்சம் இரண்டாக குறைக்கவேண்டுமென்று பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

No comments