Breaking News

சுவாமி விபுலானந்தர் மாநாடு கோலாகலமாக ஆரம்பம்

சுவாமி விபுலானந்தரின் 125வது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு விபுலானந்தர் மாநாடு மட்டக்களப்பில் இன்று 05.10.2017 வியாழக்கிழமை காலைவேலையில் கோலாகலமாக ஆரம்பமானது.

இந்து கலாசார திணைக்களம்,சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகமும் இணைந்து இந்த நிகழ்வினை நடத்துகின்றது.




சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில் இந்துகலாசார திணைக்களம்,சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் முன்னாள் இந்துமதவிவகார அமைச்சர் செ.இராஜதுரை, கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் உட்பட மதத்தலைவர்கள், இந்துகலாசார திணைக்கள அதிகாரிகள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் உள்ள சுவாமி விபுலானந்தர் சமாதியருகில் இருந்து விபுலானந்தரின் யாழுடன் கலைகலாசுர நிகழ்வுகளுடன் ஊர்வலம் ஆரம்பமானது.

No comments