Breaking News

பாண்டிருப்பில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம்

கல்முனை பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலயத்தின் திருச்சடங்குகள் ஆரம்பமாகி தற்போது மிகவும் சிறந்த முறையில் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் நேற்று மாலை திருச்சடங்கின் சிறப்பு நிகழ்வான பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செல்லும் நிகழ்வானது மிகவும் சிறந்த முறையில் நடைபெற்றது.






மகாபாரதக்கதையின் வாழ்க்கை வரலாற்றினை சித்தரிக்கின்ற இவ்விழாவானது ஆண்டு தோறும் மிகவும் கோலாகலமான முறையில் நடைபெறுவது வழமை அதே போன்று இம்முறையும் பக்த அடியார்களின் காவடி ஆட்டங்களும், கற்பூரச்சட்டி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் மரபு ரீதியான முறையில் வீமன் வாள் மாத்தும் நிகழ்வானது இந்நிகழ்வின் பிரதான அம்சமாக அமைவதும் குறிப்பிடத்தக்கது

பஞ்சபாண்டவர்கள் நோட்புச்சோறு உண்டு தாங்கள் வனவாசத்தை முடித்து ஆலயத்தை சென்றடைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சி பார்ப்போர் உள்ளங்களை மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வாகும்.

No comments