Breaking News

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது

இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தகுற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் திறந்த கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு தயராகவிருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் மகேஷ் சேநானாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் தேசிய பாதுகாப்பின் நிமித்தம் நிலைகொண்டுள்ள இராணுவ முகாம்களையும் விரைந்து அகற்ற முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் நேற்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிபதிகளை சந்தித்து அசிபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையினால் குறிப்பிடப்பட்டுள்ள இராணுவத்தினர் செயற்பட வேண்டிய ஒழுங்குவிதிகளை பின்பற்றியே நாம் இதுவரை காலமும் செயற்பட்டு வந்துள்ளோம். அதற்கு முரணான செயற்பாடுகளை நாங்கள் முன்கெடுக்கவில்லை.

அவ்வாறு ஏதேனும் சந்தேகங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு இருக்குமாயின் அதனை தெளிவுபடுத்த நாம் தயாராகவுள்ளோம். இது குறித்த விவாதங்களுக்கு இலங்கை இராணுவம் தயார் நிலையிலேயே உள்ளது.

வடக்கு, கிழக்கில் தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டுதான் இராணுவம் நிலைக்கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் இராணுவ பிரசன்னத்தை வடக்கு கிழக்கில் குறைக்க முடியாது. இராணுவ முகாம்களையும் அங்கிருந்து விரைந்து அகற்ற முடியாது. நாம் மக்களின் பாதுகாப்புக்காகவும் தனி நபர் உரிமைக்காகவுமே போராடுகிறோம்“ என தெரிவித்துள்ளார்.

No comments