இரண்டு நீதிபதிகள் ஒரே தீர்ப்பு – நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு ஆரம்பம்
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில், தீர்ப்பாயத்தின் தலைவரான, நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தனது தீர்ப்பை வாசித்து முடித்துள்ள நிலையில், தீர்ப்பாயத்தின் மற்றொரு நீதிபதியான, மாணிக்கவாசகர் இளஞ்செயழியன் தனது தீர்ப்பை படித்து வருகிறார்.
மூன்று நீதிபதிகளைக் கொண்ட இந்த தீர்ப்பாயத்தின் மற்றொரு உறுப்பினரான நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் இடம்பெற்றுள்ளார்.
அவர் தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனின் தீர்ப்பையே தாமும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
இந்தநிலையிலேயே மூன்றாவது நீதிபதியான இளஞ்செழியன் தீர்ப்பை வாசித்துக் கொண்டிருக்கிறார்.
எவ்வாறாயினும், தீர்ப்பாயத்தின் பெரும்பான்மையினரான இரண்டு நீதிபதிகள், கூட்டு வன்புணர்வுப் படுகொலையையும், சாட்சியங்களின் உண்மைத் தன்மையையும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments