திட்டமிட்ட காணி பிடிப்புக்கு எதிரான ஆர்ப்பாடடம் இன்று
திட்டமிட்ட காணி பிடிப்புக்கு எதிரான ஆர்ப்பாடடம் தற்போது மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் இருந்து முறாவோடையை நோக்கி புறப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு முறாவோடை தமிழ் வித்தியாலயத்துக்கு சொந்தமான மைதானத்தை முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்கள் அடாத்தாக கைப்பற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கிழக்கில் தமிழர் நிலங்கள் முஸ்லீம் சமூகத்தினரால் அடாத்தாக பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சற்றுமுன்னர் அதி வணக்கத்துக்குரிய அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தலைமையில் முறாவோடை மாணவர்கள் மற்றும் சிங்கள தமிழ் மக்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
தற்போது மட்டகளப்பு பிள்ளையாரடி பகுதியில் வழிபாடுகளுடன் ஆரம்பமான ஆர்ப்டபாட்டம் முறாவோடை நோக்கி செல்வதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் இணைந்து கொண்டுள்ளதாகவும் காணி அபகரிப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பேரணியாக செல்வதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.









No comments