Breaking News

மாகாணசபை தேர்தல் 2017 இல் என்னவகையான செயல்பாடுகள் செய்து எம் இருப்பினை தக்கவைக்க போகிறோம்?

கிழக்கு மாகாணசபை தேர்தல் 
வரும் ஒக்ரோபர் முதல் வாரத்தில் 
- மகிந்த தேசப்பிரிய

#நாம் என்னவகையான செயல்பாடுகள் செய்து எம் இருப்பினை தக்கவைக்க போகிறோம் ?
இளைஞர்களைக் கொண்ட ஒரு வேட்பாளர் பட்டியலை தயார் செய்து TNA க்கு கொடுப்போம்?
யார் இளைஞர் வேட்பாளர்கள் என்னும் கேள்வி தொக்கி நிட்கிறது?

TNA உள்ள வெறுப்பால இம்முறை கணிசமான வாக்குகள் தேசிய கட்சிகளின் தமிழ் வேட்பாளர்களுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே எம் மக்களின் மனதை வெல்ல பாரிய மாற்றம் ஒன்று எற்படுத்தபட வேண்டும் அவையாவன.
1.அதிக அளவான புதிய முகங்களுக்கு வாய்பளிக்க வேண்டும் அதில் இளைஞர்கள் பெண்கள் உளவாங்கபட வேண்டும் . கடந்த முறை திருகோணமலை யில் இருந்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தெரிவானர்
2.அனைத்து தமிழ் கட்சிகளிம் ஓர் அணியில் கேட்க வேண்டும். ஒரு வாக்கும் வீணாக்க கூடாது்
3 இறுதியாக..நகைப்புரிய விடயமாக தோன்றினாலும் ஏதாவது தேசிய கட்சியுடன் இப்போதே ஒரு இணக்பாட்டிற்கு செல்லல்.( துரோகிய விட எதிரி பரவாயில்லை)
முஸ்லிம் கட்சிகள் இம்முறை தமிழரை புறம்தள்ளி UNP யுடன் இணைந்து அதிக ஆசனங்களை கைப்பெற்றி எம்மை எதிர்கட்சியில் அமர வைக்க மாபெரும் சதி நடைபெறுகிண்றது. ஆகவே இம்முறை UNP,UPFA ஆகியவற்றுக்கு அழிக்கும் வாக்குகள் SLMC இனை பலப்படுத்தும். TNA கடந்தமுறை 11ஆசனங்களை பெற்றபோதும் UNP மற்றும் NFF இன் ஆதரவு இருந்தும் அவற்றை புறக்கணித்து ஆட்சியை கோட்டைவிட்டு மக்களை ஏமாற்றியது இது தற்போது மக்கள் அவர்கள் மீது கொண்ட வெறுப்பிற்கு பிரதான காரணம். தற்போது மக்கள் மாற்றுகட்ச்சியினை தேடுகின்றனர். எது எவ்வாற் இருந்தாலும் எமக்குள் பிரிவு நிச்சயம் பின்னடைவை உண்டாக்கும் இம்முறை மக்களை ஓரணியில் திரட்ட விழிபுணர்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் தம் முன் விரிக்கப்பட்டிருக்கும் சதிவலைகளை சரியாக புரிந்து கொண்டு செயல்படவில்லை என்றால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 76வீதமாக இருக்கும் தமிழ் மக்கள் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் 24வீதமாக இருக்கும் முஸ்லீம்கள் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெறுவார்கள்.
சுயேட்சைக்குழுக்களில் சுமார் பெரும்பாலான சுயேட்சைக்குழுக்கள் தமிழர்களால் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு குழுவுக்கும் தலா 25 இலட்சம் ரூபாவை முஸ்லீம் அரசியல்வாதி ஒருவரே வழங்கியுள்ளார்.

தமிழர்கள் ஒன்றிணைந்தால் பெரும்பான்மைண்கட்சிகளில் முஸ்லிம் நபர்களை புறம்தள்ளி தமிழர்களை உள்நுழைந்து TNA மற்றும் பெரும்பான்மை காட்சிகளிலும் தமிழர் இருப்பை உறுதிப்படுத்தலாம்.
இன்றைய தேவை TNA உம் வேண்டும் அதேவேளை பெரும்பான்மை கட்சிகளில் தமிழர் உறுப்பினர்களும் தேவை இம்முறை 3000 அல்லது 5000 வாக்குகள் பெற்றாலே வெற்றிபெறும் வாய்ப்பு வந்தாலும் வரலாம்.
யார் இளைஞர் வேட்பாளர்கள் என்னும் கேள்வி தொக்கி நிட்கிறது?
உங்கள் ஊரில் உள்ள முற்போக்கு சிந்தனையாளர் இருந்தால், உண்மையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என கருத்துபவர்களானால் நம் பிரதேசம் நம் மாவட்டம் சார்ந்த நலனில் மற்றும் அபிவிருத்தியில் உண்மையில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால் 
வெறும் 
தேசியம் 
இனம் 
உரிமை 
என்ற பசப்பு உணர்ச்சி வார்த்தைகளை உதிர்காமல் அபிவிருத்தி மக்கள் நலன் செயல்பாடுகளுக்கு ஆதரவு தருபவராக இருந்தால் எமது ஆதரவினையும் அவர்களுக்கு தருகிறோம். வருகின்ற மாகாண சபை தேர்தலுக்கு தயாராக சொல்லுங்கள்!

உத்தேச தீர்வு (உங்கள் கருத்துக்களை பகிருங்கள்)
சாதாரணமாக எமது முகப்புத்தக போராளிகள் இதட்கு துணை நிற்ப்பார்கள். அவர்களிடம் தகுதியான நபர்களை polling தெரிவு மூலம் அடையாளப்படுத்த சொல்லலாம்.
polling என்பது மக்கள் வாக்குகள் முலம் தெரிவு செய்வது. இதில் கருத்துக்களும் பகிரப்படும். இவைகள் மூலம் நாம் தகுதியான நபரை அடையாளம் காணலாம். இதனை பிரதேச வாரியாக செய்வது சிறந்தது.
இதட்கு முதலில் ஒரு பொறிமுறை குழுவை அமைக்கவேண்டும். இவர்களின் தெரிவே அறுதியும் இறுதியுமானது.
எமது தமிழ் சமுகத்தால் எல்லா பிரதேசங்களில் இருந்தும் எமது தகுதியான நபர்களை polling தெரிவு முலம் தெரிவு செய்யலாம். தெரிவு செய்யும் நபர்கள் TNA விடம் ஒப்படைக்கப்படும். (இது மக்கள் தெரிவு)
(பலதரப்படட சமுக குழும அவதானிப்புகளுடன் எனது கருத்தும் சேர்ந்தது)


#உங்கள்_கருத்துக்களை_அப்படியே_பகிருங்கள்!
 #ஏச்சு_பேச்சு_என்றாலும்_வாங்கிக்கொள்ள_தயார்


No comments