Breaking News

கொழும்பு பஸ்சும் மட்டக்களப்புச் சனமும் - Batticaloa To Colombo

( திருவன் )

மட்டக்கப்பு - கொழும்பு பயணிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் போக்குவரத்து சபை பேரூந்துக்களும் தனியார் பேரூந்துக்களும் சேவையில் ஈடுபடுகின்றன.ஆனால் அவ்வகையான பேரூந்துக்களில் சில குறைபாடுகளும் சில அடாவடித்தனங்களும் காணப்படுகின்றன.அதனை சுட்டிக்காட்டுகின்ற பதிவே "கொழும்பு பஸ்சும் மட்டக்களப்புச் சனமும்  ".

  • உணவு
பசியேன்று வரும் பயணிகளுக்கு உணவத்தினர் இலவசமாக உணவு வழங்கவில்லை உணவிற்கு தகுந்த பணத்தினை பெறுவது போல் அதனுடைய உணவுத்தரத்தினையும் பராமரித்துக் கொள்ள வேண்டும்.அத்துடன் உதாரணமாக உணவினை தயாரிப்பதற்குக சாதாரணமாக 10 நிமிடம் தேவைப்படும் என்றால் பலவகையான உணவுகளை (  கோழி கொத்து, பிறைட் ரைஸ் , மரக்கறி கொத்து, இடியப்ப கொத்து ) பேரூந்து தரித்து நிற்கும் 15 நிமிடத்தில் அல்லது 20 நிமிடத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும். குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பேரூந்து தரித்தாலும் பரவாயில்லை பல பேரூந்து தரித்துக்கொண்டால் மக்களுக்கு போசனையான உணவு பயணி கொடுக்கும் பணத்திற்குதான் கிடைக்குமா ??

உதாரணம்

கடந்த திங்கட்கிழமை கல்முனையிருந்து கொழும்பிற்கு பயணித்த களுவாஞ்சிக்குடி போக்குவரத்து சபைக்கான பேரூந்து வழமை போல மட்டக்களப்பில் 7 மணிக்கு மேலுதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு 8 மணியளவில் ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள  " அரபாத் உணவகத்தில்  " 15  நிமிடம் தரித்து நிற்கப்பட்டது.இதன் போது உணவகத்தில் சிறு அமைதியின்மை ஏற்பட்டது.அதற்குரிய காரணம் யாதேனில் உணவகத்தினர் பழைய இடியப்பத்தினை ( மணத்து போன ) கொத்துக்கு பயன்படுத்தியமையாகும்.இதில் கவலைக்குரிய விடயம் யாதேனில் பேரூந்து ஓட்டுனரும் பேரூந்து உதவியாளரும் தங்களுக்கு எதுகும் தெரியாதது போல் நடந்து கொண்டமேயாகும்.




  • சகோதர மொழி பாடல்கள் மற்றும் நிகழ்ச்சிகள்
பொதுவாக மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் போது பெரும்பாலும் தமிழ் மொழி தெரிந்தவர்களே பயணிக்கின்றனர்.ஆனால் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமாக பேரூந்துகளில் சகோதர மொழி பாடல்கள் மற்றும் நிகழ்ச்சிகளே பயன்படுத்தப்படுகின்றன.இதன் மூலம் பயணிகள் அசௌகரிகங்களை எதிர்கொள்வதுடன் பயணித்தினை சிறப்பானதாக மேற்கொள்ள முடிவதில்லை.

  • தொலைபேசி மூலம் பிரயாண சீட்டினை பதிவு செய்யும் போது ஏமாற்றுதல்
ஒரு பயணி தொலைபேசி அழைப்பின் மூலம் ஆசனத்தினை பதிவு செய்யும் போது குறித்த ஆசனங்களின் இலத்தினை உங்களுக்காக ஒதுக்கியுள்ளோம் என்று உறுதி கொடுத்துவிட்டு இறுதியாக பேரூந்தில் ஏறும் போது மன்னிக்கவும் அவ்வாசனம் தவறுதலாகா உங்களுக்கு வழங்கப்பட்டு விட்டு என்று போலி வார்த்தைகளை கூறுதல்  அவ்வாறு அப்பயணி விவாதிக்கும் போது தேவையேன்றால் வா இல்லை என்றால் பேரூந்தை விட்டு இறங்கு என இறுதிநேரத்தில் மிரட்டுதல்.




அத்துடன் அளவுக்கதிகமாக ஆசனங்களை பதிவு செய்து கொண்டு ஆசனங்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் அப் பயணிகளை என்ஜின் மேலே , படிக்கட்டில் அமர்த்துகின்றனர்.ஆனால் ஆசனப்பதிவிற்காக பெறுகின்ற பணத்தினையே அறவிடுகின்றனர்.இவ்வாறான விடயங்கள் அதிகமாக தனியார் பேரூந்துகளிளேயே அதிகமாக இடம் பெறுகின்றன.

  • பயிற்சியற்ற சாரதிகள்

பேரூந்தில் பயணம் செய்பவர்களின் உயிரை பாதுகாக்க வேண்டிய வாகன ஓட்டுனரின் கடமை ஆனால் அக் கடமையில்  சிறிய தளம்பல் நிலை காணப்படுகின்றது.காரணம் தனியார் பேரூந்துக்களில் பயணம் செய்து  போது பயணிகள் ஆழந்த நித்திரைக்கு செல்லும் சந்தர்ப்பத்தில் அல்லது ஆள் நடமாட்டம் குறைந்த வீதியுடாக செல்லும் போது பேரூந்து உதவியாளர்கள் பேரூந்தினை செலுத்துகின்றனர். இதன் போது அவ் உதவியாளர்களிடம் வாக அனுமதி பத்திரம் இருக்கின்றாதா அல்லது தகுதியான வாகன ஓட்டுனராக என்பது சந்தேகமே அத்துடன் பயணிகளின் உயிர்களுக்கு உத்திரவாதமும் இல்லை.

  • புகையிலை,மது,புகை பாவனைகள் 
பொதுவாக மேற்குறித்த பழக்கங்கள் குறைவாக காணப்பட்டாலும் சில சந்தர்ப்பங்களில்  பயன்படுத்தப்படுவதால் பயணிகள் பலவகையாக அசௌரியங்களை ஏதிர்நோக்குகின்றனர்.



மேற்குறித்த பிரச்சினைகள் மட்டக்களப்பு கொழும்பு என்பதை விட பொதுவாக பயணங்களின் போது ஏற்படுகின்றன.இதனால் பயணிகள் பேரூந்துக்களில் பயணம் செய்வதனை தவிர்த்துக் கொள்ள விரும்பிகின்றர்.

No comments