Breaking News

ஊவா கல்விச் செயலர், பதுளை ஓ.ஐ.சி. உள்­ளிட்டோர் விசா­ர­ணைக்கு அழைப்பு : மனித உரி­மைகள் ஆணைக்குழு அறி­வு­றுத்தல்

பதுளை தமிழ் மகளிர் மகா வித்­தி­யா­லய அதிபர் ஆர். பவா­னியை முழந்­தா­ளிடச் செய்து மன்­னிப்பு கோரச் செய்­தமை, அச்­சம்­பவம் தொடர்பில் பொய்­யான வாக்குமூலத்தை வழங்க அச்­சு­றுத்­தி­யமை உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழுவும் விசேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. ஆசி­ரியர் சங்­கத்தின் செய­லாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் கபே அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் கீர்த்தி தென்­னகோன் ஆகி­யோரின் முறைப்­பாட்­டுக்கு அமை­வாக இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளன.

அதன்­படி இந்த விவ­காரம் குறித்த விசா­ர­ணை­க­ளுக்கு இன்று காலை 10.00 மணிக்கு கொழும்பில் உள்ள இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்குழுவில் ஆஜ­ரா­கு­மாறு,  ஊவா மாகாண கல்விச் செய­ல­ாளர் சந்­தியா அம்­பன்­வெல உள்­ளிட்­டோ­ருக்கு மனித உரி­மைகள் ஆணைக்குழு அறிவித்தல் அனுப்­பி­யுள்­ளது. ஊவா மாகாண கல்விச் செய­ல­ாளர் சந்­தியா அம்­பன்­வெல,  மாகாண கல்விப் பணிப்­பாளர் ரத்­நா­யக்க, வலய கல்விப் பணிப்­பாளர் ரண­சிங்க,  பதுளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, மாகாண சபை ஊழி­யர்­க­ளான  பாலித்த ஆரி­ய­வங்ச, பிர­சன்ன பத்­ம­சிறி,  அமில கிரி­ஷாந்த ரத்­நா­யக்க ஆகி­யோ­ருக்கே விசா­ர­ணை­க­ளுக்கு ஆஜ­ராக அறிவித்தல் அனுப்பப்­பட்­டுள்­ளது. 
எச்.ஆர்.சி./236/18  எனும் முறைப்­பாட்டு இலக்­கத்­துக்கு அமை­வாக இந்த அறிவித்தல் அனுப்பி வைக்­கப்பட்­டுள்­ள­தாக இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்குழுவின் உயர் அதி­காரி யொருவர் தெரி­வித்தார்.
விசா­ர­ணை­க­ளுக்கு அழைக்­கப்பட்ட மேற்­படி நபர்­க­ளுக்கு மேல­தி­க­மாக முறைப்­பாட்­டா­ளர்­க­ளான ஜோஸப் ஸ்டாலின் மற்றும் கீர்த்தி தென்­னகோன் பாதிக்­கப்பட்ட அதிபர் ஆர். பவா­னிக்கும் இன்று மனித உரி­மைகள் ஆணைக்குழு­வுக்கு வருகை தரு­மாறு அழைப்பு விடுக்­கப்பட்­டுள்­ளது.

 அதிபர் ஆர். பவா­னியை பாதிக்­கப்பட்ட தர­ப்பாக கருதி இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.  மனித உரி­மைகள் ஆணைக்குழுவில் செய்­யப்­பட்­டுள்ள  முறைப்­பா­டு­களில், ஊவா முத­ல­மைச்­சரும் மேலே பெய­ரி­டப்­பட்ட ஊவா கல்விச் செயலர் உள்­ளிட்­டோரும் செய்த செயல் கார­ண­மாக அர­சி­ய­ல­மைப்பின் 12(1) ஆவது அத்­தி­யாயம் மற்றும் 13 ஆம் அத்­தி­யாயம் ஊடாக உறுதி செய்­யப்பட்­டுள்ள மொழி மற்றும் கருத்து வெளிப்பாட்டு உரிமை, 10 ஆவது அத்தியாயம் ஊடாக உறுதி செய் யப்படும்  மன அமைதி ஆகியன கடுமை யாக மீறப்பட்டுள்ளதாக  சுட்டிக்காட்டப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments