Breaking News

இன முறுகலை அடுத்து ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் முக்கிய அறிவித்தல்.


கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் அசாதாரண சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு ஏறாவூர் சம்மேளனம் பல்வேறு காத்திரமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வரும் நிலையில்,
இன்று காலை சந்திவெளி சந்தைக்கு வியாபாரத்திற்கு சென்றவர்கள் வெளியேற்றப்பட்டதுடன் வாகனங்கள் மீது கல்வீச்சும் இடம்பெற்றதை தொடர்ந்து ஏற்பட்ட சிறு பதட்டமான சூழலை அடுத்து ஏறாவூர் சம்மேளன பிரதிநிதிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை ஏறாவூர் ஜாமியுல் அக்பரில் இடம்பெற்றது.



அதனைத் தொடர்ந்து ஏறாவூர் பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதிகள் , கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் சுபையிர் ஹாஜியார் சகிதம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் , உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரை சந்தித்து நிலைமைகள் தொடர்பிலும் இன ஒற்றுமையின் அவசியம் கருதி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.
இணைப்பு.....



ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் முக்கிய அறிவித்தல்.

இன்று காலையில் ஏறாவூர் வியாபாரிகளுக்கு சந்திவெளி சந்தையில் வியாபாரம் செய்வதற்கு சில விசமிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கவனத்தில் எடுத்த சம்மேளனம் கீழ்வரும் தீர்மானங்களுக்கு வந்துள்ளது.



1. இரண்டு சமூகங்களின் நல்லுறவை எதிர்காலத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்.

2. நாளை முதல் சகோதர இனத்தை சேர்ந்த தமிழ் சகோதரர்கள் மறு அறிவித்தல் வரும் வரை ஏறாவூருக்குள் கூலி வேலை மேசன் வேலை வியாபர நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. (சகோதர இனத்தின் பாதுகாப்பு கருதி)

3. ஏறாவூரில் இருந்து செல்லும் முஸ்லிம் வியாபாரிகளும் மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் பிரதேசங்களுக்கு செல்வது கூடாது.

4. சகல தரப்பினருடனும் சம்மேளனம் பேசி விரைவாக இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.








No comments