Breaking News

கிழக்கு தேர்தல் வாக்குறுதிகள் (கற்பனை)

கிழக்கின் எலெக்சன் பிளான் -
ELEACTION PLAN!

தேர்தல் திட்டம் -செயல் திட்டம்....
இப்படியும் இருக்குமோ?

#ஆளும் #பலம் #கொண்டோர்:
#திடீர் #திருபுபங்களாக.....

● அமைச்சர்களின் விஜயங்கள்;
●சமுர்த்தி,மீன்பிடி, விவசாய,விளையாட்டு, பெண்கள்/விதவைகள் முதியோர், பாடசாலை,ஆலய நிகழ்ச்சிகள்,உதவிகள்,
சலுகைகள் ;
●பட்டதாரி வேலைவாய்ப்புகள்,வேலை உறுதிகள்,சிபாரிசுக் கடிதங்கள்;
●பின்தங்கிய கிராமங்களுக்கும் புதிய பாதைகள், பஸ் சேவைகள்,
●உன்னிச்சை குளத்துநீர் உட்புறக் கிராமங்களூக்கு வழங்கும் உறுதிமொழிகள், குழாய்கள்(#குவித்தல் #மட்டும் )
●குளங்களை இணைக்கும் குறுகிய காலத் #திட்டங்கள் ,கூட்டங்கள், படப்பிடிப்புகள்,படம் காட்டல்கள்;
●வெள்ள நிவாரணங்கள், வெகுமதிகள்.
■■கிராமிய பொருள் #அதிவிருத்தி அமைச்சு:
●கோழிக்குஞ்சு வழங்குதல்;
(மழையாய் வெள்ளமாய் இருந்தாலென்ன)
●அங்கொரு இங்கொரு #தையல்களுக்குத் தையல் இயந்திரங்கள் வழங்குதல்;
●மழை வெள்ள நிவாரணங்கள்,நுளம்பு வலை,பாய்கள் etc etc;
●ஆடைத் தொழிற்சாலைக்கு அமைவான #இடம் #பார்த்தல் #மட்டும்;
●ஜோன்... மூலம் சபைகளை ஜோராக வளைத்தல்--#fast ஆன சில உதவிகள்;
●வறிய தாழ்(தலித்)பிரிவினருடன் வாகான பேரம் பேசல்--உபசாரங்கள்;

#தமிழ்க் #கட்சிகள் :
#தமிழர் #பேரவை:

●ஐயாவின் அஸ்கிரிய சோகம் பகிர்தல்;
●மட்டக்களப்பு செஞ்சிலுவைச் தலை சிறப்பு உலாவருதல்;
●அங்கொரு, இங்கொரு திட்டம் என அவசர உதவி பயிற்சி;
●தாயகக் கோட்பாட்டு தாலாட்டுப் பாடல்;
●முஸ்லிம் மக்களுடன் முக்காபுலா பாட்டிசைத்தல்;
●எழுக தமிழ் பாட்டுக்கு ஏற்ற புது இசையமைப்பு;

■#கூட்டமைப்பு :

●இளையோரை எட்டத்தில் வைத்தல்;
●கட்டில் முதியோருடன் களப்பணி கருத்தாடல்;
●ஜெனீவாத் தண்ணீர் இறக்கி ஜெனரேட்டர் வழியாக வழங்கல்;
●தாழ்பிரிவு(தலித்) மக்களுடன் #தள்ளி நின்று கைகுலுக்கள்;
●சாதி,சனங்களுடன் சடுதி சந்திப்புகள் ;
●சாமத்திய சடங்குகள்,திருமண வீடுகள்,மரண வீடுகள், ஆலயங்களுக்கு அவசர விஜயங்கள்,ஆரத்தழுவல்கள்,அன்பளிப்புகள்;
●கரையோர அலகை வழங்கும் கல்முனை சந்திப்புகள்;
●உணர்ச்சி பேச்சுகளுக்கு ஒத்திகை பார்த்தல்;

#முஸ்லிம் #கட்சிகள் :
(தமிழ்ப் பகுதிகளில் )

●அரிசி, அங்கர்மா,அவசரப் பொதி வழங்கல்;
●அராபிய குழாய்க் கிணறு ஆளுக்கொன்றாய் வழங்கல்;
●மழைக்கால கொசுவத்தி,நுளம்புவலை,பாய் உதவிகள்;

#ஏனைய #தமிழ் #கட்சிகள் --அவர்களுடன் இணைந்த சிங்கள கட்சிகள்:
●உள்வீட்டுப் படகும் ஓடுதற்காய் வெளிவரலாம்!
●மகிழ்ந்த மனத்துடன் மகிந்த மகிழடித்தீவும் வரலாம்!

#இளைஞர் #சக்திகள் :
●முகநூல் முழக்கத்தில் மட்டும் முழுமையாய் நம்பிக்கை வைத்தல்!

#புலம்பெயர் #உறவுகள் :

●ஆளுக்கொரு தமிழ் கட்சிகளுக்கு அவசரப் பண முடிச்சு அளித்தல்!
இனியென்ன. ....

☆☆☆☆☆ஊத்துச்சேனை ஆச்சிகூட #ஒருமாத #ராணியாவாள்!

Satchithananthan Palanisamy


No comments