Breaking News

கதிர்காம பாதயாத்திரை செல்லும் நாய்க்குட்டி!! உங்களால் மட்டும்தான் முடியுமா?


யாழ்ப்பாணத்தில் இருந்து நாய் ஒன்றின் கதிர்காமம் நோக்கிய நடைப் பயணம் 
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகிய வேல்ச்சாமி யோகநாதன் தலைமையிலான கதிர்காமம் நோக்கிய குழுவில் நாய் ஒன்றும் அடியார்கலோடு சேர்ந்து கதிர்காமம் நோக்கிப் பயணம் செய்துவருகின்றமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது..

மனிதர்களுக்கு இடையில் இறைபக்தி என்பது குறைவடைந்து வருகின்ற இக் காலத்தில் மிருகங்களிடம் தெய்வ பக்தி மேலோங்கி… நிற்பதையே இவ் நாயின் கதிர்காமம் நோக்கிய கால்நடைப்பயணம் அமைந்துள்ளதாக முருக பக்தர்கள் மெய்சிலிர்த்துக் கூறுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 500 கிலோ மீற்றர் தூரம் கதிர்காமம் நோக்கிய நடைப்பயணம் அமைந்துள்ளது. இந் நிலையில் குறித்த நாய் தற்போது கால்நடையாக மட்டக்களப்பு பிரதேசத்தை வந்தடைந்துள்ளது.
அடியார்கள் வழியில் தங்குகின்ற ஆலயங்களில் அதுவும் தங்குகின்றது. அவர்கள் சாப்பிடும் மரக்கறி வகை சோற்றினையே அதுவும் சாப்பிடுகின்றது.

ஒரு நாய் யாழிலிருந்து கதிர்காமம் நோக்கி செல்வது சாதாரணமான விடயமல்ல. வழியில் ஏனைய நாய்களைச் சந்திக்கநேரிடும் சில வேளை அவற்றுடன் சண்டை பிடிக்கவேண்டி ஏற்படும். நீண்ட பயணக்களைப்பினால் இடை நடுவில் நின்றுவிடும் இத்தனை தடைகளையும் தாண்டி நாய் ஒன்று நடைப்பயணத்தில் ஈடுபட்டிருப்பதை அந் நாய் முற்பிறப்பில் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக தமது குறையினை நீக்கவே கதிர்காமம் நோக்கிச் செல்லலாம் என அடியார்கள் கூறுகின்றனர்.
இந் நாய்க்குள்ள தெய்வ பக்தியை மனிதர்களிடம் காண்பது அரிதாகிவிட்டது என்பதே உண்மையாகும்.

கதிர்காம பாதயாத்திரை செல்ல சவால் விடும் -நாய்க்குட்டி

No comments