Breaking News

தமிழினத்தை உலகறியச் செய்தவர் பிரபாகரன் மட்டுமே

தமிழ் இனம் என்று ஒன்று உள்ளது. அதற்கு வீர வரலாறு இருக்கின்றது என்பதை உலகறியச்செய்தவர் பிரபாகரன் மட்டுமே என தெரிவித்துள்ள இயக்குனர் சிகரம் பாரதிராஜா அவர் இல்லையென்றால் தமிழ் என்ற ஒன்று இருப்பதே தெரியாத நிலையிருந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.



மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முதுபெரும் கலைஞர்கள், இளம் கலைஞர்கள்,ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

இன்று சனிக்கிழமை காலை இலண்டன் அகிலன் பவுன்டேசனின் அனுசரணையில் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு கிரான்குளம் சீமூன் கார்டனில் நடைபெற்றது.

புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் கதிரவன் த.இன்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இயக்குனர் இமயம் பத்மஸ்ரீ பெ.பாரதிராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.



No comments