Breaking News

விபத்தில் சிறுவன் உள்ளிட்ட மூவர் மரணம்

திக்வெல்ல  மாத்தறை வீதியின் பொல்கஹமுல்லை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது, முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த ஆறு பேர் காயமடைந்த நிலையில், திக்வெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், 29 வயதான சாரதி மற்றும் 37 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, காயமடைந்த நான்கு பெண்களும் சிறுவன் ஒருவனும் மேலதிக சிகிச்சைகளுக்காக, மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதன்போது 7 வயதான குறித்த சிறுவன் பலியாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். 

No comments