Breaking News

தமிழ் மக்கள் பதிவு செய்யும் எண்ணிக்கையில் வீழ்ச்சி - தேர்தல் திணைக்களம் அதிர்ச்சி

2017 ஆண்டின் வாக்காளர் இடாப்பின் வரைபு நகலின் தயாரிப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு பதியபடட வாக்காளர் தொகையில் தமிழர்களின் பதிவில் வீழ்ச்சி உள்ளது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சம்பந்தமாக இதுவரை முழு இலங்கையிலும் பதியப்பட்ட விழுக்காடுகள் உங்களுக்கு 

சிங்களவர் 82%
முஸ்லீம்  95.4 %
தமிழர் 67.3%

நீங்கள் கண்டிப்பாக இங்கே உங்கள் விடயங்கள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்றும் பதிவு செய்யப்படாவிடடால் புதிதாக பதிவு செய்து கொள்ளுங்கள். அதிகமாக பதிவு செய்தால் மட்டுமே அதிகமான வாக்குகளை வழங்கி எமக்கான அங்கீகாரங்களை பெற்று கொள்ள முடியும்.

குறித்த இடாப்பில் தங்களது பெயர்கள் உரிய முறையில் பதிவு செய்யப்படாத வாக்காளர்களுக்கு, எதிர்வரும் செப்டெம்பர் 06 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தல் இடாப்பு பட்டியலின் பிரதிகள், கிராம சேவையாளர் பிரிவுகள், பிரதேச செயலகங்கள், மாகாண சபைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான திருத்தங்கள் காணப்படும் நிலையில் அவற்றை கிராம சேவையாளருக்கு அல்லது தேர்தல்கள் ஆணையகத்திற்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.

இந்த வரைபு நகலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். 

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பான வாக்காளர் பட்டியல் இவ்வாண்டுக்கான (2017) திருத்தத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




தேர்தல் திணைக்கள தகவல் உள்ளீடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் 



Add caption









No comments