Breaking News

கிழக்கில் தமிழ் "முதலமைச்சர் " கோசமும் தமிழரசு கட்சியும்


கிழக்கில் தமிழ் "முதலமைச்சர் " கோசமும் தமிழரசு கட்சியும்.
கடந்த 08.07.2017 அன்று தமிழரசு கட்சி காரியாலயத்தில் கிழக்குமாகாண சபை தேர்தல் தொடர்பிலும்,தேர்தலுக்கு தம்மை தயார் படுத்துதல் தொடர்பிலும் அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களின் பிரசன்னத்துடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட எழுத்தாளர் சலீம் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வொன்றில் கலந்துகொள்றும் நோக்கில் கிழக்கு விஜயம் செய்த மாவை சேனாதிராஜா,கட்சியின் பிரதேச மட்ட செயற்பாட்டாளர்களை, பிரதேசத்துக்கு இருவர் என்ற அடிப்படையில் வரவழைத்து கூட்டம் நடாத்தினார்.
சுமார் 30 நபர்களவில் கலந்துகொண்ட இக்கூட்டத்துக்கு கட்சியின் உபதலைவர் திரு.பொன்.செல்வராசா அவர்கள் தலைமை தாங்கினார்.
கூட்டத்துக்கான தலைமையுரையை பொன். செல்வராசா அவர்கள் ஆற்றினார். அதனை தொடர்ந்து கட்சி செயலாளர் துரைராஜசிங்கம்,மாகாண சபை உறுப்பினர் நடராசா, பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் போன்றோர் உரையாற்றினர்.
இவர்களது உரைகளில் தமிழ் தேசியம் குறித்தோ அல்லது தமிழரின் அச்சுறுத்தல்கள் அற்ற வாழ்வுகள் பற்றிய
எந்த விடயங்களும் அடங்கியிருக்கவில்லை.
தமிழரசு கட்சியை வளர்த்தல் ,பதவி பெறல் ,சுகபோகம் அனுபவித்தல் என்பனவே பிரதான இடத்தை பிடித்தன.
அடுத்து மாவை சேனாதிராஜா உரையாற்றினார்.இவரது உரையில் தமிழ் தேசியம் அல்லது சுயநிர்ணயம் அல்லது குறித்து எவையும் குறிப்பிடப்படவில்லை .
வடமாகாண சபையையும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் பற்றியே அதிகம் பேசினார்.
முதலமைச்சர் பதவி என்பது விக்கினேஸ்வரன் அவர்களுக்கு எனது பெருந்தன்மை மனது மூலம் தாரைவார்க்கப்பட்ட ஒன்று என்றும் விக்கினேஸ்வரன் நன்றி மறவாதிருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் முதலமைச்சர் தன் தலையிலேயே தான் மண்ணை அள்ளி வைத்துக்கொள்கிறார். கட்சியினது கருத்துக்களில் அவர் அக்கறை கொள்வதில்லை என்றார்.










No comments