Breaking News

முஸ்லிம்களின் காணி அபகரிப்பை தடுக்க புத்தபிக்குவின் உதவியை நாடும் தமிழ் இளைஞர்கள்!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவட்ட ஒருங்குணைப்பு குழு தலைவர் ஞா.சிறீநேசன்,சீ.யோகேஷ்வரன்,அமல் வியாளேந்திரன் மற்றும் கிழக்குமாகாணசபை விவசாயஅமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்குமாகாணசபை உறுப்பினர்களான இ,துரைரட்ணம், கோ.கருணாகரம் எனப்படும் ஜனா,பிரசன்னா, நடராசா, ஞா.கிருஷ்ணபிள்ளை  எனப்படும் வெள்ளிமலை ஆகியவர்கள் முஷ்லிம் அரசியல் வாதிகளின் அடிவருடிகளாக
வும் அவர்களின் செல்லப்பிள்ளைகளாகவும் முதலமைச்சரின் வீட்டு சேவகர்களாகவும்தொடர்ந்து செயல்படுவதனால் தாம் மாற்றுவழியை தேடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் மட்டுநகர் மங்கல ராம விகாரை புத்ததுறவி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின்உதவியை நாடியுள்ளதாகவும் வாழைச்சேனை பகுதி இளைஞர்கள் தெரிவித்தனர்.   

இதன்காரணமாகவே மட்டக்களப்பு, வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகத்துக்குப்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலயத்துக்குரிய விளையாட்டு மைதானத்தின்  காணியை, முஷ்லிம் நபர்கள் அபகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (18) காலை 9.45 மணியில் இருந்து 11 மணிவரை ஈடுபட்டனர்.

கடந்த 8 மாதங்களாக பாடசாலைக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் அத்துமீறிய குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும் இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையென போராட்டத்தில் ஈடுபட்டோர் கவலை தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ளவர்கள், மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகளை வழங்குவதாகவும் இது தொடர்பில் பல்வேறு தரப்பினர்களுக்கு அறிவித்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தொடர்ச்சியாக குறித்த சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு, மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரெட்ண தேரரும் வருகைதந்திருந்தார்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய தேரர், இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு செல்லவுள்ளதாகவும் 10 தினங்களுக்குள் குறித்த பாடசாலை மைதானத்துக்குள் அத்துமீறிய குடியேற்றங்களை அகற்றித்தருவதாகவும் உறுதியளித்தார்.

தமிழ்தேசியகூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள் இந்தவிடயத்தில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இனிவரும் காலத்தில் எதிரியானாலும் நண்பனாக பௌத்த துறவிகளிடம் நாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை இளைஞர்கள் எமது ஊடகத்திற்கு கருத்து கூறினர்,

பொதுபல சேனாவின் பௌத்ததுறவியுடன் அதன் அமைப்புமூலமாக இஷ்லாமியர்கள் மேற்கொள்ளும் காணிஅபகரிப்பை தடுக்கப்போவதாகவும் அந்த இளைஞர்கள் கூறியதை அவதானிக்கமுடிந்தது.இதற்கு தமிழ்தேசியகூட்டமைப்பு என்ன பதில் சொல்வார்கள்.











No comments