Breaking News

சுவாமி விபுலானந்தர் முஸ்லிம் மக்களுக்கும் உதவியுள்ளார்



அனைத்துக்கும் அரசாங்கத்தினை நம்பிக்கொண்டிருக்காமல் தமிழ் மொழியை பொறுத்தவரையில் இந்து மதத்தினைப்பொறுத்தவரையில் கலைகலாசாரத்தினைப்பொறுத்தவரையில் எங்களது சொந்த கூட்டு முயற்சி ஊடாக முன்னேற்றமடையச்செய்து பாதுகாத்துக்கொள்வதற்கும் அனைவரும் இயன்ற பணியை மேற்கொள்ளவேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.அன்றைய காலகட்டத்தில் வறுமை நிலையில் உள்ள முஸ்லிம் மக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை சுவாமி விபுலானந்தர் செய்துள்ளதாகவுமு; அவர் தெரிவித்தார்.

சுவாமி விபுலானந்தரின் 125வது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் கடந்த மூன்று தினங்களாக நடாத்தப்பட்டுவந்த சுவாமி விபுலானந்தர் மாநாட்டின் இறுதி நிகழ்வு இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்துகலாசார திணைக்களம்,சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகமும் இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுறை அரங்கில் நடைபெற்றுவரும் இந்த நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வானது கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் உடுவை தில்லை நடராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
சுணீறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கி.துரைரெட்னசிங்கம் உட்பட ஆன்மீக தலைவர்கள்,தமிழ் அறிஞர்கள’ என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் எதிர்க்கட்சி தலைவர் கௌரவிக்கப்பட்டதுடன் விபுலானந்தரின் யாழ்நூலும் வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன் விபுலூனந்தர் மாநாட்டினையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களும் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
சுவாமி விபுலானந்தர் பல மொழிகளை கற்றுள்ளதுடன் பல மொழி நூல்களையும் மொழிபெயர்த்து தந்துள்ளார்.சுப்ரமணிய பாரதியின் பல பாடல்களை தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார்.
ஆனைத்து மக்களும் அனைத்து மொழிகளிலும் வெளிவரும் விடயங்களை அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இவ்வாறான மொழிபெயர்ப்பு பணிகளையும் மேற்கொண்டார்.

பொதுவாக மக்களுக்கு கல்விப்பணிபுரிவதில் பாரிய பங்களிப்பினை சுவாமி விபுலானந்தர் செய்துள்ளார்.இராமகிருஸ்ண மிசனுக்கும் விபுலானந்தருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.மைலாப்புரில் உள்ள இராமகிருஸ்ண மிசனில்தான் விபுலானந்தர் என்ற பெயரைப்பெற்றார்.

இலங்கையிலும் வடகிழக்கு பகுதிகளிலும் இராமகிருஸ்ண மிசனின் செயற்பாடுகளை பரப்பியவர் விபுலானந்தரே.பல பாடசாலைகளையும் ஆரம்பித்தார்.

வறுமைநிலையில் இருந்த இளைஞர்கள் தொடர்பில் அதிகளவில் சுவாமி விபுலானந்தர் அக்கரைசெலுத்தினார்.அனைத்து மக்களுக்கும் முடிந்தளவு சேவையாற்றவேண்டும் என்ற கொள்கையுடன் செயற்பட்டுவந்தார்.
இலங்கை சிவில் சேவையில் இருந்த கல்விமான் அசீஸ் அவர்களுடன் இணைந்து வறிய முஸ்லிம் மக்களுக்கும் தன்னால் இயன்ற பணியை செய்வதற்கு பின்நிற்கவில்லை.முஸ்லிம் மக்களுக்கு பல உதவிகளை செய்தார்கள்.

சுவாமி விபுலானந்தர் தனது முழு வாழ்வினையும் மக்களது சேவைக்காக மனித சமூதாயத்தின் சேவைக்காக அர்ப்ப ணித்தார் . இராமகிருஸ்ணர்,விவேகானந்தரை இந்தியாவில் உள்ள மக்கள் எவ்வாறு மதித்தார்களோ அவ்வாறு விபுலானந்தரை இலங்கையில் வாழும் மக்கள் மதித்தார்கள்.

அவரை கௌரவிக்கும் வகையில் இலங்கையில் முத்திரையொன்று வெளியிடப்பட்டது. அதேபோன்று ஜேர்மனியிலும் ஒரு முத்திரைவெளியிடப்பட்டது.சுவாமி விபுலானந்தர் மூலம் கிடைத்த படிப்பனைகள் செயற்பாடுகள் மறக்கப்படக்கூடாது.
அவை அழியக்கூடாது.இவ்வாறான நிகழ்வுகள் ஊடாக அது தொடர்பான அறிவினை மக்களுக்கு வழங்கமுடியும்.

No comments