Breaking News

நாய்கள் சாப்பிட்ட மீன்களை மனிதர்கள் சாப்பிட விற்பனை செய்யும் ஓட்டமாவடி மீன் வியாபாரிகள் - ரகசிய காணொளி


11.07.2017 வாழைச்சேனை மீன் பிடி துறைமுகத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை பதிவிடுகிறோம்.

இது இன்று மட்டும் இல்லாமல் வழமையாக நடைபெறும் ஒரு நிகழ்வு என்று அங்கே உள்ளவர்களால் கூறப்படுகிறது. இந்த மீன்கள் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை சந்தைகளில் விற்பனைக்கு அனுப்பபடுகின்றன. நாய் சாப்பிட பின்பே மனிதனுக்கு என்ற தத்துவத்தின் கீழ் இவர்களின் செயல் உள்ளது..
இந்த காட்சியில் சம்பந்தப்பட்ட நபரிடம் அறிவுறுத்தியும் கூட அவர் அதனை பொருட்படுத்தவே இல்லை என்பதே கவலைக்குரிய விடயம் .

வாழைச்சேனை மீன் பிடி துறைமுக அதிகாரிகளே உங்கள் கவனத்திற்கு:-
துறைமுகத்தில் நாய்கள் உள் நுழையாமல் தடுப்பதற்கு உரிய வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்வது உங்கள் கடமையாகும்.
வாழைச்சேனை பிரதேச சுகாதார அதிகாரிகளே :- தயவு செய்து இதற்கான நடவடிக்கைகளை எடுத்து மக்களை நோய்களுல் இருந்து காப்பது உங்கள் கடமை.

நாயின் எச்சிலில் மனிதனுக்கு அபாயகராமான நோய்களை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த வைரஸிற்கு #ரேபிஸ் என்று பெயர்.
ரேபிஸ் கிருமிகள் மனித உடலிற்குள் சென்ற 30 லி 60 நாட்களுக்குள் வியாதி மனிதனிடம் வெளிப்படுகிறது. இந்த வைரஸ் மூளைக்குள் பரவி பல பகுதிகளைத் தாக்கி, நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது.

தகவல் : ஓட்டமாவடிமுகநூல் அரசியல்







No comments