Breaking News

அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு நள்ளிரவுஅமுலுக்கு வருகின்றது. ( விலை விபரம் இணைப்பு)

அரிசி உட்பட 9 அத்தியாவசியப் பொருட்களின்விலைகளைசதொச விற்பனை நிலையங்களில் இயன்றளவுகுறைத்துவிற்பனை செய்வதற்கு  ஜனாதிபதிதலைமையிலானவாழ்க்கைச் செலவு உப குழு மேற்கொண்டமுடிவுக்கிணங்க அப்பொருட்களுக்கான விலைகள்குறைக்கப்பட்டு இன்றுநள்ளிரவு (28) முதல் புதிய விலைகள்அமுலுக்கு  வருவதாகசதொச நிறுவனத்தின் தலைவர்டி.எம்.கே.பிதென்னக்கோன்தெரிவித்தார்.


நாட்டில் திடீரென ஏற்பட்ட அரிசித்தட்டுப்பாட்டினால்சந்தையில்அரிசியின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டது


இதனால் நாட்டில் பல பாகங்களிலும் பலஎதிர்ப்புகள்வெளிவந்ததையடுத்து ஜனாதிபதியின்விசேடஆலோசனைக்கமைய வாழ்க்கைச் செலவுக்கான உபகுழுஅவரின் தலைமையில் கூடி சந்தையில் அரிசிமற்றும்அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைசதொசநிறுவனத்தினூடாக நியாயமான விலையில் விற்கமுடிவுசெய்துள்ளதாக அவர் தெரிவித்தார்

நாடு முழுவதிலுமுள்ளசகல சதொச கிளைகளிலும் ஓரேவிலையில் இந்தப்பொருட்கள் விற்பனை செய்யப்படுமென அவர்அறிவித்ததுடன்ஆவற்றுக்கான விலைகளையும் குறிப்பிட்டார்.வொக்சோல்வீதியில் அமைந்துள்ள சதொச தலைமையகத்தில்இன்றுமாலை (28) நடைபெற்ற ஊடகவியலாளர்மாநாட்டிலேயேநிறுவனத்தின் தலைவர் அரசாங்கத்தின் இந்தத்தீர்மானத்தைவெளியிட்டதோடு பொருட்களுக்களுக்குமானவிலைகளையும்குறிப்பிட்டார்.


மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
அத்தியாவசியப் பொருட்களின் விலைஉயர்வினால்பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைகருத்திற்கொண்டே ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவைஉபகுழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக  அவர் குறிப்பிட்டார்.


இதன் மூலம் சந்தையில் தரமான அத்தியாவசியப்பொருட்களைகுறைந்த விலையில் விற்பனை செய்யும்நிறுவனமாக சதொசநிறுவனம் விளங்குவதாகத் தெரிவித்தநிறுவனத்தின் தலைவர்சதொச நிறுவனம் மக்களின்நலன்களை மையமாக்கொண்டேஎனறும் தமதுநடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக்குறிப்பிட்டார்




பொருட்களின் விலைகள்       பழைய விலை   புதிய விலை
வெள்ளை நாடு                                     77                74
வெள்ளைப் பச்சை அரிசி                   68                 65
சம்பா அரிசி                                        89                84
சிவப்பு அரிசி                                       77               75
சிவப்பு நாடு                                         83               80 
வெள்ளைச் சம்பா அரிசி                    94               90
சிவப்புச் சம்பா                                   90             88
நெத்தலி (தாய்லாந்து)                                539           525

இது மாத்திரமின்றி ஏனைய வெளியார் கடைகளிலும்சுப்பர்மார்க்கட்டிலும் விற்கப்படும் அனேகமானஅத்தியாவசிப்பொருட்களை சதொச நிறுவனம் வெகுவாகக்குறைத்துபின்வரும் விலைகளில் பெற்றுக்கொள்ளநடவடிக்கைஎடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


 ஏதிர் வரும் மாதங்களில்பாவனையாளர்களுக்கு மேலும் பலநன்மைகளை வழங்கஅரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனஅமை;சர் றிஷாட்பதியுதீன் தமக்கு உறுதியளித்துள்ளதாகதென்னக்கோன்தெரிவித்தார்.


பெரிய வெங்காயம்                                125 ரூபா
உருளைக்கிழங்கு                                  130 ரூபா
டின் மீன்                              400g             130 ரூபா
லங்கா சதொச பால் மா         400g          305  ரூபா
லங்கா சதொச பால் மா          1Kg       760
சீனி                                                             107 ரூபா
பருப்பு                                                       152 ரூபா
கோதுமை மா                                           86 ரூபா


No comments